பக்கம்:மூன்று தலைமுறை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று தலைமுறை 27

வெள்ளரிப் பிஞ்சுபோல்; உடனே ஒடித்துச் சாப்பிட வேண்டும் என்று காக்கில் ஜலம் ஊறுகிறதே, அந்த வெள்ளரிப் பிஞ்சுபோல இருக்கிருய்.” அவர் வருணனை வெறுமனே வரவில்லை; அசட்டுச் சிரிப்போடு வந்தது.

முருகாயி சூட்சுமம் தெரிந்தவள். ஜமீன்தார் எல்லே கடக்கும் கிலேக்கு வந்துவிட்டார் என்பது அவளுக்கு நன்ருகத் தெரிந்தது. ‘நான் வருகிறேன், எசமான்' என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமலே வீடு வந்து சேர்ந்தாள். அன்று அவள் என்னவெல்லாம் யோசித்தாளோ, என்ன தீர்மானத்துக்கு வந்தாளோ, அது தேவ ரகசியம்.

சொல்லி வைத்தாற்போல ஏகாம்பரத்துக்கு நாலு நாள் கடுமையான ஜூரம் வந்துவிட்டது. அவன் அரண் மனேக்குப் போக முடியவில்லே. முருகாயிதான் சலவைத் துணிகளேக் கொண்டு போய்க் கொடுத்து வந்தாள்.

ராத்திரியெல்லாம் அவள் ஏகாம்பரத்துக்கு அருகில் உட்கார்ந்திருப்பாள். அவள் கண்ணிலிருந்து ஓயாமல் நீர் சுரந்துகொண்டே இருக்கும். ஏகாம்பரம் அதைக் கவனிப் பான். தன்னுடைய உடல் கிலேயைக் கண்டு அவள் வருங்துகிருள் என்று அவன் கினேப்பான். ... ." 'அடி பைத்தியம்! எதற்காக அழுகிருய்? இரண்டு நாளில் ஜுரம் செளக்கியமாகிவிடும். இதற்காகக் குழங் தையைப்போல அழுகிருயே' என்று அவன் சொல்வான். 'என் துரையே! என் ராசா! நான் என்ன செய்வேன்! இந்த ஜூரம் எனக்கு வரக்கூடாதா?’ என்று அவள் புலம்புவாள்; அழுவாள்; விம்முவாள். அவன் கண் அயர்ந்து துரங்கினலும் அவள் தூங்காமல் துயரக் கடலில் ஆழ்ந்திருப்பாள். - - - . .

ஏகாம்பரத்தின் வியாதிக்காக அவள் அழுபவளாகத் தோன்றவில்லை. அவ்வளவு சுலபமாக அவள்ே அசைத்து விட முடியாது. அவள் தன் இயல்பான கிலேயில் இருந் 'தாளாளுல் சிரித்துச் சிரித்துப் பேசியே அந்த ஜுரத்தைப் போக்கியிருப்பாள். அவ்லுக்கு அதைரியம் வந்தாலும் தைரியமூட்டிப் பொழுது போவதே தெரியாமல் செய் திருப்பாள். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/32&oldid=620437" இலிருந்து மீள்விக்கப்பட்டது