பக்கம்:மூன்று தலைமுறை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 முன்று தலைமுறை

மித்துக் கொண்டது. ஆண்மையில்லாதவன் வாழ்க்கை சுகமாக இருக்கிற வரையில் அதுபவிப்பான். ஏதாவது இடையூறு வந்தால் அவன் மனசு கலங்கிவிடும். அப் புறம் அவனுக்கும் அமைதி இராது. அவளுல் பிறருக்கும் அமைதி இராது. ஏகாம்பரம் ஒருவருக்கும் சொல்லாமல் அன்று ராத்திரியே, அதோ இருக்கிறதே அந்த மடுவிலே விழுந்து பிராணனே விட்டான், வண்ணுன் மடு என்ற பெயரையும் அவன் உயிரையும் அது வாங்கிக்கொண்டது.

'அடாடா அப்படியா ஆயிற்று! அப்புறம் முரு காயியை ஜமீன்தார் கைப்பற்றிக் கொண்டாரா?” என்று வேகத்தோடு கேட்டது கழுதை,

இல்லே, இல்லே. அதிலிருந்துதான் அவளேக் கெட்ட வளென்று நம்ப என் மனசு இடம் கொடுக்கவில்லை. ஏகாம்பரம் உயிர் விட்டானே, அதே இரவில் கண்ண ராவி யான காரியம் ஒன்று கடந்தது. கமலபுரத்திலிருந்து வந்த தடியர்கள் இந்த வீட்டுக்கு கடுராத்திரியில் நெருப்பு வைத்துவிட்டார்கள்: போதாக் குறைக்குச் சுவர்களேயும் வேறு சில ஆட்களே வைத்துக்கொண்டு இடித்துவிட் டார்கள்.

முருகாயி இந்த அலங்கோலத்தில் பெற்றேன், பிழைத்தேனென்று ராத்திரியே கோழிப் பேட்டை போய்ச் சேர்ந்தாள். அந்தத் தடியர்கள் பயமுறுத்தி ஒட்டிவிட்டார்கள். தன் புருஷன் மனமுடைந்து வீட் டுக்கு வராமல் எங்கோ இருந்தானென்று அவள் முதலில் எண்ணினுள். அவன் இரண்டு நாளில் வருவான் என்று எண்ணியிருந்த அவளுக்கு அவன் செத்துப்போன செய்தி தான் கிடைத்தது. பாவம்! அப்போது அவள் கர்ப்பமாக இருந்தாள். தன் தகப்பனர் வீடு போய்ச் சேர்ந்த அவள் என்ன ஆளுள் என்று சொல்வார் யாரும் இல்லை.

அந்த இரவில் எனக்கு இந்த உருவம் கிடைத்தது. பிறகு

இந்தப் பக்கம் இருந்த குடிசைகளெல்லாம் கூட மறைக் தன. ஏகாம்பரம் பேயாய்த் திரிகிருனென்ற பயத்தால் இக் தப் பாகங்களிலே யாரும் குடியிருக்கவில்லை. அன்று விட்டுச் சுவராக இருந்து குட்டிச் சுவரான கான், தன்னக் தனியாகத் துணே யாரும் இன்றி கிற்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/39&oldid=620448" இலிருந்து மீள்விக்கப்பட்டது