பக்கம்:மூன்று தலைமுறை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று தலைமுறை

1

“கழுதை கெட்டால் குட்டிச் சுவர்” என்ற பழமொழியை அர்த்தம் இல்லாமல் செய்துவிட்டது இந்தக் கழுதை. இந்தக் கழுதை கெடாத கழுதை. அது குட்டிச் சுவருக்கு அருகில்தான் நின்றுகொண்டிருந்தது. வெறும் குட்டிச்சுவராக இருந்தால் அங்கே நின்றிருக்காது. சுற்றி லும் புல் தரை இருந்தது. எதிரே ஒரு சிறிய குளம். குளம் என்றால் படித்துறை, கைபிடிச் சுவர் ஒன்றும் இல்லை, மடுவென்று தான் சொல்ல வேண்டும். அதற்கு வண்ணான் மடு என்று பெயர்.

கழுதை நின்றபடியே தூங்கிக்கொண்டிருந்தது. அதன் மேல் வெயில் படாதபடி குடை போலப் பாதுகாத்தது குட்டிச் சுவர். அந்தக் குட்டிச் சுவர் மண் சுவர் அல்ல : செங்கற் சுவர். மிகவும் ஏழை வீட்டின் பகுதி என்று சொல்வதற்கும் இல்லை; பெரிய பணக்காரனுடைய மாளிகையின் பழைய சின்னம் என்ற சொல் தெற்கும் இல்லை. இடிபாடுகளைக் கொண்டு ஆராய்ச்சி நடத்தினால், நடுத்தரமான குடும்பம் வாழ்ந்து வந்த நாகரிகமான வீட்டின் சிதிலம் இது” என்ற முடிவுக்கு வர கேருான வீட்டின் மொன குடும் கொண்டு - தம்பீ!” என்ற குரல் கழுதையின் உறக்கத்தைக் கலைத்தது. ஆ.ை.. சுமக்கும் வாகனமே!" என்று மறு - படியும் சத்தம் கேட்டது. -- - - - ' 'யார் நம்மைக் கூப்பிடுகிறார்கள். வக்கணையாகக் கூப் பிடுகிறார்களே!" என்று கழுதை சுற்று முற்றும் பார்த்தது. ஒருவரையும் காணவில்லை. குட்டிச்சுவர் தான் இருந்தது. மறுபடியும் கண்ணை மூடப் போகும் சமயத்தில், என்ன தம்பி, காதில் விழவில்லையா?” என் ற ஒலி மறுபடியும் கேட்டது. - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/6&oldid=1230933" இலிருந்து மீள்விக்கப்பட்டது