பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. கூலி கணக்கிடல் FIXING THE RATE ஓர் அச்சகத்தில் திருமண அழைப்பு அச்சிட ஒருவர் வந்தார். 1/6 அளவில் 500 படிகள் அச்சிட வேண்டும் என்றார். கூலி எவ்வளவு ஆகும் என்று கேட்டார். அச்சகத்தார் "தாள் நீங்கள் தருகிறீர்களா? நாங்கள் போட்டுக் கொள்ள வேண் டுமா என்று கேட்டார். 'நான் எங்கே அலைய முடிகிறது திருமண வேலையே இடுப்பை ஒடிக்கிறது. நீங்களே வாங்கிப் போட்டுக்கொள்ளுங்கள். நேர்மையான கூலி சொல்லுங்கள்' என்றார் வாடிக்கையாளர். அச்சகத்தார் ரூ 120) ஆகும் என்றார். "எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் அச்சகம் இருக் கிறது. அங்கே ரூ. 80 தான் சொன்னார். நண்பர் சீதாபதி சொன்னார் என்று இங்கு வந்தேன். நீங்கள் ஒரேயடியாகச் சொல்லுகிறீர்களே' என்றார் வாடிக்கையாளர். நண்பர் சீதாபதி தானே அனுப்பினார். அவருக்கு எங்களை நன்றாகத் தெரியும். நாங்கள் ஆளுக்கொரு கூலி சொல்வ தில்லை. சிறு குழந்தையை அனுப்பினால் கூட ஒரே கூலி தான் சொல்லுவோம். ஏதோ நீங்கள் இவ்வளவு தொலைவு எங்களைத் தேடி வந்திருக்கிறீர்கள். அதனால் ரூ 110/டோட்டுக் கொள்கிறோம்' என்றார் அச்சகத்தார். நெடு நேரம் வாதாடிப் பேசிக் கடைசியாக வாடிக்கைக் காரர் வட்டமாக ரூ 100|- தருவதாகக் கூறி வேலையை ஒப்படைத்து முன் பணம் தந்து சென்றார்.