பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100


பயன்படுத்துகிறோம், இவை பொருள்கள் 2. அச்சுக் கோத்தல் அச்சடித்தல் மடல் கட்டுதல் ஆகிய வேலைகளைச் செய்கிறோம். இவை கண்ணுக்குத் தெரிந்தவை. கண்ணுக்குத் தெரியாத சில செலவுகள், சில வேலைகள் உள்ளன. அவற்றையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அச்சகம் நடக்கும் இடத்தின் வாடகை அச்சுப் பொறிகளின், எழுத்துகளின் தேய்மானம். அச்சுப் பொறிகள் எழுத்துகள் ஆகியவற்றின் விலைக்கு வட்டி அச்சகத்தில் எரியும் விளக்குகள். பொறிகள் ஒட ஆகும் மின்விசைச் செலவு. அச்சுப் பொறிகளுக்குப் பயன்படுத்தும் எண்ணெய் தொழிலாளர்கள் கைகழுவப் பயன்படும் மண்ணெண் ணெய், தேய்ப்புக்கட்டி, பருத்திக் கழிவு: தொழிலாளர் தவிர அலுவலகத்தின் வேலைபார்ப் போரின் சம்பளம். மேலாளரின் சம்பளம். உரிமையாளரின் உழைப்புக்கு ஈடாக அவர்தம் செலவுக்கு எடுத்துக் கொள்ளும் தொகை. அவருடைய, அலுவலகத்தில் வேலைபார்ப்போருடைய போக்குவரத்துச் செலவு. விடுமுறை நாட்கள். இத்தனையும் மனக்கண்ணின் முன் நிறுத்தித் தான் ஒரு பொருளின் கூலிமதிப்பைக் கணக்கிடல் வேண்டும்.