பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13


இது. இந்த கல்லுக்குச் சலவைக் கல்லைப் பயன்படுத்துவது உண்டு. இது விரைவில் உடைந்து போகக் கூடிய தாகையால், இரும்பிலேயே வார்த்து வைத்திருக்கிறார்கள். வேண்டிய அளவுகளில் இந்த இரும்புக்கல்லை வாங்கிக் கொள்ளலாம். இதை நிறுத்துவதற்கு மரத்தினால் ஒரு தாங்கி Stand செய்து கொள்ள வேண்டும். 4. Proof Machine-Glouiill in Gurg, இதில், உருட்டு பொறி, அழுத்து பொறி என இரு வகை உண்டு. படியெடுக்க வேண்டிய பொருளை மைதடவி வைத்து அழுத்தி மெய்ப்பெடுப்பது ஒரு வகை. தாளின்மேலே உருளையை நகர்த்திப் படியெடுப்பது இன்னொரு வகை. 5. Ērtista, sir-Stands இவை அச்சுப் பெட்டிகளைத் தாங்கி நிற்பதற்குப் பயன்படுகின்றன. 6. அச்சுப் பெட்டிகள்-Cases அச்செழுத்துக்களைப் போட்டு வைக்கப் பயன்படு கின்றன. இப்பெட்டிகளில் ஒவ்வோர் எழுத்துக்கும் ஒவ்வொரு குழியிருக்கும். 7. கைக்கோல்.Stick இவை மரத்தினால் ஆனவை. எழுத்து அடுக்கப் பயன் படுபவை. எழுத்து அடுக்கும் பகுதி ப வடிவில் உள்ளது. மரக் கைக்கோல்கள் வேண்டிய அளவுகளில் தனித்தனியே செய்து வைத்துக் கொள்ள வேண்டும், பித்தளைக் கைக் கோல்களில் Brass Stick இருக்கும் திருகு தடுப்புகளை வேண்டிய அளவுக்கு முன்னும் பின்னும் நகர்த்திக் கொள்ளலாம்.