பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. புள்ளி POINT அச்சகத்தில் எழுத்துக்களின் உயரத்தைப் புள்ளி யளவில் குறிப்பிடுவது வழக்கம். அடுத்தடுத்துப் புள்ளிகளை வரிசையாகக் குத்தினால் வரக் கூடிய உயரமே இத்தனை புள்ளி உயரம் என்று குறிக் கப்படுகிறது. தமிழில் 8 புள்ளி உயரம் உள்ள எழுத்து மிகச் சிறிய எழுத்தாகும். ஆங்கிலத்தில் 6 புள்ளி உயரம் உள்ள எழுத்து மிகச் சிறிய எழுத்தாகும். இதற்கு மேல் 9 புள்ளி, 10 புள்ளி, 12 புள்ளி, 16 புள்ளி, 18 புள்ளி, 24 புள்ளி, 36 புள்ளி, 72 புள்ளி உயரங்களில் அச்சு எழுத்துக்கள் வார்க்கப்படுகின்றன. பொதுவாக நாம் படிக்கும் புத்தகங்களில் கையாளப் படும் எழுத்துக்கள் 10 புள்ளி அளவுள்ளனவாகும். சிறுவர்களுக்கும் முதியோர்களுக்கும் பயன்படும் புத்தகங் களில் பெரும்பாலும் 12 புள்ளி அல்லது 14 புள்ளி எழுத்துக் கள் பயன்படுத்தப்படுகின்றன . தலைப்புகளுக்கு 18 புள்ளி 36 புள்ளி 72 புள்ளி எழுத்துக் கள் பயன்படுகின்றன. அ-2