பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18


தமிழ்ச் செய்தித் தாள்களில், வார மாத இதழ்களில் 9 புள்ளி எழுத்துக்கள் பயன்படுகின்றன. பள்ளியின் தொடக்க வகுப்புகளுக்குப் பயன்படும் பாடப் புத்தகங்களில் 18 புள்ளி எழுத்துக்கள் அல்லது 24 புள்ளி எழுத்துக்கள் பயன்படுகின்றன. எழுத்துக்களைப் புள்ளிக் கணக்கில் குறிப்பிடும்போது அந்த அளவு அதன் உயரத்தை மட்டுமே குறிப்பதாகும். எழுத்துக்களின் அகலம் அந்த அந்த எழுத்தின் வடிவுக்கேற்ப வெவ்வேறு அளவில் இருப்பதால், அவற்றைக் குறிக்காது. எழுத்து மாதிரிகள் : 8 புள்ளி அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. 10 புள்ளி அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. 12 புள்ளி அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. 14 புள்ளி அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. 18 புள்ளி அகர முதல எழுத்தெல்லாம் 24 புள்ளி அகர முதல எழுத்தெல் 36 புள்ளி அகர முதல எழுத்