பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


(Setting) அழுத்திப் பிடித்த படி கழற்றி எடுக்க வேண்டும். கழற்றி எடுத்த வரிகளை அடுக்கு தட்டில் (galley) வைக்க வேண்டும். அடுக்கு தட்டில் 120 வரிகள் வைத்து விட்டால் அது ஒர் அடுக்கு (One galley) என்று கூறப்படும். இப்படி ஐந்து அடுக்குகள் செய்து விட்டால் ஒரு படிவத்திற்குப் பக்கம் கட்ட லாம். ஒரு படிவம் என்பது 16 பக்கங்கள் கொண்டதாகும். எழுத்து அடுக்கும் விதிகள் 1. ஒரு பத்தியின் முதல் வரியை அடுக்கத் தொடங்கும் போது இரண்டு எம் வெளிக் கட்டை (2 em Cuad) போட்ட பிறகே எழுத்தைத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு பத்தியிலும் சொற்றொடர் முடிந்தபின் மிகுந்துள்ள இடங்களை வெளிக் கட்டைகளால் நிறைத்தல் வேண்டும். 2. ஒரு வரியின் இறுதியில் ஒரு சொல்லின் முதல் எழுத்து மட்டும் வரக் கூடாது. அந்தச் சொல் முதல் வரியில் அடங்காவிட்டால், முதல் எழுத்தை அடுத்த வரிக்குக் கொண்டு சென்று சொல் முழுவதும் ஒன்றாக வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு எழுத்து மட்டுமே தனித்து நின்று பொருள் தரக் கூடிய சொல்லாக இருக்குமானால் அந்தத் தனி எழுத்து வரியிறுதியில் வரலாம். பூ, வா, போ, பை, பா, ஈ போன்ற தனித்து நின்று பொருள் தரக்கூடிய ஒற்றை எழுத்துச் சொற்கள் வரி யின் இறுதியில் வரலாம். பூசணி என்ற சொல்லின் முதல் எழுத்தாகிய பூ வரி இறுதியில் தனித்து வரக் கூடாது. வாசல் என்ற சொல்லின் முதல் எழுத்தாகிய வா மட்டும் வரி இறுதியில் தனித்து வரக் கூடாது.