பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38


10. பிழையில்லாமல், சொற்களோ சொற்றொடர்களோ 11. விட்டுப்போகாமல் எழுத்துக் கோத்தல் வேண்டும். பிழையா, பிழையில்லையா என்ற ஐயம் ஏற்படும்போது, மூலப்பபடியில் உள்ளபடியே அடுக்க வேண்டும். மூலப் படியிலே பிழையிருக்கும் என்று தோன்றினால், பிழை திருத்துபவரையோ, நூலாசிரியரையோ கேட்டுச் சரியாகத் திருத்தி யடுக்குதல் வேண்டும். அச்சுக் கோத்தபின், மெய்ப்புத் திருத்தும்போது ஒரு வரியில் சில எழுத்துக்களையோ, சொற்களையோ நீக்கி விட்டால், பிழையைத் திருத்தும் எழுத்துக் கோப்பவர் நீக்கப்பட்ட எழுத்தின் இடத்தை நிறைக்க அடுத்த வரியிலிருந்து சில எழுத்துக்களை மேல்வரிக்குக் கொண்டுவர வேண்டும். இவ்வாறு பத்தி முழுவதும் திரும்பச் செய்ய வேண்டிவரும். மெய்ப்புத்திருத்தும் போது ஒரு சொல்லையோ சில் சொற்களையோ புதிதாகச் சேர்த்தால், அதைச் சேர்த்த பின் அந்த வரியில் மிகுதிப்படும் சொற்களை அடுத்த வரிக்குக் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அடுத் தடுத்துச் சேர்த்துக் கொண்டே அந்தப் பத்தி முழுவதும் திரும்பச் செய்ய நேரிடும். அச்சுக் கோப்பாளர் அச்சுக் கோப்பாளர் முதலில் பிழையில்லாமல் எழுத்துக் களை அடுக்கப் பழகிக் கொள்ளவேண்டும். அடுத்து விரைவாக வேலை செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். கோப்பது எளிது. பிழை திருத்துவது தொல்லை யானது; எனவே கோக்கும் போதே சரியாகக் கோத்து