பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பக்கம் கட்டுதல் (PAGE MAKEUP) ஐந்து அடுக்குகள் (galley) எழுத்துக் கோத்த பின் மெய்ப்பு எடுக்கவேண்டும். இதனை அடுக்கு மெய்ப்பு (galley proof) என்பர். இதனை மெய்ப்புத் திருத்துபவர் திருத்திக் கொடுத்த பின், மெய்ப்பில் குறிப்பிட்டிருக்கும் பிழைகளை அச்சுக் கோப்பவர் ஒவ்வொன்றாகத் திருத்த வேண்டும். மெய்ப்புப்படி பிழை திருத்திய பின் பக்கம் கட்டும் பணி மேற்கொள்ளலாம். பக்கம் கட்டுவதற்கென்று தனியாக ஒரு அடுக்கு தட்டை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். அதில் தலையில் எட்டு எம் அளவுக்குக் கட்டவெளிகளை யடுக்கிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு கட்டுரைத் தலைப்பை 24 புள்ளி எழுத்தில் அடுக்கிப் போடுதல் வேண்டும். அந்தத் தலைப் பின் கீழே ஓர் எம் இடைவெளிச் சக்கையைப் போட்டு விட்டு முதல் அடுக்குத் தட்டிலிருந்து சுமார் இருபத்தைந்து வரிகளை எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். வரிக்கு வரி ஈய வெளித் தகடுகளைத் (leads) திணிக்க வேண்டும். இடது கை ஆள்காட்டி விரலால் வரியடுக்குகளை அனைத்து விலக்கிப் பிடித்துக் கொண்டு, வலது கையில் அடுக்கி வைத்திருக்கும் வெளித் தகடுகளை ஒவ்வொரு வரிக்கும் இடையில் திணித்தல் வேண்டும், இந்த சய வெளித்தகடுகள் இரண்டு புள்ளித்