பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41


தகடுகளாகவோ, மூன்று புள்ளித் தகடுகளாகவோ இருக் கலாம். ஆனால் எந்த அளவுத் தகடுகளை எடுக்கிறோமோ, அந்தத் தகடுகளே நூல் முழுவதும் கையாள வேண்டும். பத்திக்குப் பத்தி அரை எம் சக்கைகளைத் திணிக்க வேண்டும். நாம் இப்போது பக்கம் கட்டுவது 1/8 கிரவுன் அளவுள்ள புத்தகம் என்று வைத்துக் கொள்வோம். இந்தப் பக்கத்தின் அகலம் 22 எம் ஆகும். இந்தப் பக்கத்தின் நீளம் 35 எம் ஆகும். பக்கத்தின் அகலம் 22 எம் என்றால், வரிகளின் அகலமும் 22 எம் அளவே யிருக்கும். எனவே வரிகளுக்கு ஊடே பயன் படுத்தும் ஈய வெளித் தகடுகளும், அரை எம் ஒரு எம் சக்கை களும் 22 எம் அகலமுள்ளவையாகவே இருக்கும். ஒரு பக்க அளவுக்குத் தகடுகள், பத்திச் சக்கைகள் திணித்தபின் அளவு தகட்டை (gauge) எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த அளவு தகடு என்பது பித்தளைக் கோட்டுத் தகட்டினால் (Brass Rule) ஆனது. இது கிரவுன் 1/8 அளவு புத்தகத்திற்கு 35 எம் அளவு வெட்டப்பட்டிருக்கும். இந்த 35 எம் அளவு தகட்டைப் பக்கத்தின் பக்கவாட்டில் வைத்து பக்கத்தின் நீளத்தை அளக்க வேண்டும். 35 எம் அளவுக்குள் அடங்கும் வரிகளை வைத்துக்கொண்டு மீதி வரிகளை அடுத்த பக்கத்துக்கு எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். 35 எம் அளவுள்ள பக்கத்தைச் சுற்றிலும் நூலைக் கொண்டு நான் கைந்து சுற்றுச் சுற்றி ஒரு மூலையில் இழுத்துச் செருகி நூலை மடக்கி விடவேண்டும். இரண்டாவது பக்கம் கட்டத் தொடங்கும்போது, முதலில் வெளிக்கட்டைகளைக் கொண்டு ஒரு வரி 22எம் அளவில் அடுக்கி அதன் நடுவில் 2 என்ற பக்க எண்ணைப் பொருத்த வேண்டும். பக்க எண் வரிக்கும், இரண்டாவது பக்கத்தின்