பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48


இதில் பக்கங்களின் தலைப் பக்கங்கள் வரும் இடம் நான்கு. இந்த இடங்களில் தலைக் கட்டைகள் நான்கையும் வைத்தல் வேண்டும். இந்தத் தலைக் கட்டைகள் 8 எம் அகலமும் 50 எம் நீளமும் உள்ளவையாக இருக்கும். அடுத்து பக்கக் கட்டைகள் எட்டு. இந்தப் பக்கக்கட்டை களின் அகலம் 7 எம் நீளம் 34 எம். இவை பக்கங்களுக் கிடை யில் வைக்கப் பெறும். குறுகி குக் கட்டைகள் நான்கு. இவை படிவச் சட்டத் தின் நடுப்பகுதியில் குறுக்குவாட்டில் வைக்கப் பெறுபவை. இவற்றின் அளவு 4 எம் அகலம் 50 எம் நீளம். இக்கட்டை கள் சட்டத்தின் இருபுறத்திலும் இடது மேல்பக்கம் ஒன்று, இடது கீழ்ப்பக்கம் ஒன்று வலது மேல்பக்கம் ஒன்று, வலது கீழ்ப்பக்கம் ஒன்றாக வைக்கப் பெறும். குறுக்கு மையத்தின் மொத்த அளவு 10 எம் ஆகும். குறுக்குக் கட்டைகளின் அகலம் 3 எம். மேல்கட்டையும் கீழ்க்கட்டையும் சேர்ந்து 6 எம் ஆகிறது. சட்டத்தின் அகலம் 4 எம் ஆக 10 எம் இடை வெளி குறுக்கு மையத்தில் கிடைக்கிறது. நெடுக்குக் கட்டைகள் நான்கு. இவற்றின் அளவு 4 எம் அகலம் 80 எம் நீளம். இக்கட்டைகள் நான்கையும் நெடுக்குச் சட்டத்தின் இருபுறமும் நீளவாட்டில் இடது புறம் மேல் பகுதியில் ஒன்றும் கீழ்ப்பகுதியில் ஒன்றும், வலது புறம் மேல் பகுதியில் ஒன்றும் கீழ்ப்பகுதியில் ஒன்றும் ஆக நான்கு கட்டை களையும் வைக்க வேண்டும். நெடுக்கு மையத்தின் இடை வெளி அளவு இருகட்டைகளின் அளவாகிய 3-3=6எம் முடன் நெடுக்குச் சட்டத்தின் அளவாகிய 3 எம் சேர்த்து 9 எம் ஆகிறது. தலைக்கட்டையின் அளவு 8 எம் பக்கக் கட்டையின் அளவு 7 எம்