பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53


புத்தக வேலையில் ஒரே மாதிரியாக வரிகளை அடுக்கிக் கொண்டு போனால் போதும். இப் பல்வகை வேலைகளில், ஒவ்வொன்றுக்கும் ஒவ் வொரு மாதிரியாகச் செய்வதோடு, ஒவ்வொன்றையும் வெவ் வேறு மாதிரிகளாகச் செய்யும் புதுநோக்கும் இருக்க வேண்டும். ஒவ்வொரு வேலையிலும் காட்சியமைப்பு (Display) புதிது புதிதாகச் செய்து காட்டும் திறமை இருக்கவேண்டும். காலப் போக்கிற்கேற்ப விருப்பங்களும், மனப்பான்மை களும், எதிர்பார்ப்புகளும் அமைகின்றன. மனித மனம் ஒரே பாணியில் செயல்படுவதை விரும்புவ தில்லை. புதுப் புது முறைகள்,புதுப் புதுப் பொலிவுகள், புதுப் புதுத்தோற்றங்கள், புதுப்புது அமைப்புகளை விரும்பும் தன்மை மனிதர்களிடம் காணப்படுகிறது. நாகரிகம் நாளுக்கு நாள் வளர்ந்துவருகிறது. காலத்திற்குக் காலம் மாறு பாடடைகிறது. அதற்கேற்ப நாமும் காலத்தையொட்டி நம் வேலைகளை புதுப் புது முறைகளில் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். மடல் தாள்களில் மடல் அனுப்புபவரின் பெயரும் முகவரி யும் மட்டுமே அச்சிட வேண்டியவை. இதிலேயே எத்தனை மாற்றங்கள், புதுமைகள் ஏற்பட்டிருக்கின்றன என்றால் வியப்பைத் தரும். எடுத்துக் காட்டாகச் சில முறைகளைப் பார்ப்போம். ம. வெ. கிருட்டினன் வரலாற்றுப் பேராசிரியர் 127, தம்புசெட்டித் தெரு சென்னை-600 001.