பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

. ஆனால் கல்வி என்ற சொல்லின் பொருள் இன்று மிக மிக விரிந்திருக்கிறது. ஒவ்வொரு தொழிலைப் பற்றியும், விரிவாகவும், விளக்க மாகவும், ஆழமாகவும், நுட்பமாகவும் கற்றுக் கொண்டால் தான் ஒருவனுடைய கல்வி நிறைவு பெறுகிறது. இன்று படிக்கும் மாணவர்கள் இலக்கியங்கள் கற்பதோடு ஏதாவது ஒரு தொழில் படிப்பும் கற்றுக் கொண்டால் தான் வாழ்க்கைப் படகை ஒட்டிச் செல்ல முடியும். தொழிற் கல்வி களுக்குகெனப் பல தொழிற் கல்லூரிகள் தொடங்கப் பெற் றுள்ளன. அவற்றில் சேர்ந்து படிப்பதற்கு ஏராளமான மான வர்கள் முன் வருகிறார்கள். ೩೯TTು, தாடியதெல்லாம் கை கூடும் நாடாக நம் நாடு இல்லாத காரணத்தால் இந்தக் கல்லூரிகளில் எல்லோருக்கும் இடம் கிடைப்பது இல்லை. கடலில் தத்தளிப்பவனுக்கு ஒரு சிறு துரும்பு கிடைத் தாலும் நம்பிக்கையோடு பற்றிக் கொள்வான். அதுபோல முன்னேறத் துடிப்பவர்களுக்கு கிடைக்கின்ற சின்ன வாய்ப்பும் பெரும் நம்பிக்கைக்கு இடம் கெரடுக்கும். நம்பிக்கை வாழ்வின் வெற்றிக்கு அடிக்கல் ஆகும். அச்சுத் தொழில் இப்போது பெரும் அளவுக்கு முன்னேறி இருக்கிறது. தொழிலின் ஒவ்வொரு சிறு கூறும் வியக்கத் தக்க அளவு மாறுபாடும் முன்னேற்றமும் கொண்டு விளங்கள் காண்கிறோம். எழுத்துக் கோப்பது, அச்சிடுவது, கட்டுவது, கணக் கிடுவது ஆகிய ஒவ்வொரு நிலையிலும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட ஆயிரம் மடங்கு புதுமையும், விரைவும், அழகும், கூடி விளங்கக் காண்கிறோம். கையினால் ஒவ்வொர் எழுத்தாக எடுத்துக் கோத்த நிலைபோய்ப் பொறிகளினால் கோக்கும் நிலையும், அவற்றை