பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58


அமைத்துவிடும். அடுத்து நிறுவனத்தின் பெயரை 24 புள்ளி எழுத்தில் போடவேண்டும்.நிறுவனத்தின் பெயர்மிக நீளமாக இருந்தால் 18 புள்ளி ஒடுங்கிய தடி எழுத்தில் போடலாம். அடுத்து நிறுவனத்தின் முகவரியை 2 வரிகளில் 10 புள்ளி தடி எழுத்தில் போடலாம். அதை அடுத்து இடதுபக்க ஒரத்தில் எண் என்றும் வலதுபக்க ஒரத்தில் நாள்.....என்றும் கோத்து விடவேண்டும். அதன் கீழே, வாடிக்கையாளரின் முகவரி எழுத இரண்டு கோடுகள் அமைத்தல் வேண்டும். இந்தக் கோடுகளின் நீளம் 28எம் அளவு இருக்கலாம். இந்த இரு கோடுகளுக்கும் மேலே இடது ஒரத்தில் திருவாளர்கள்' என்ற எழுத்துக்களை அடுக்கி வைக்கவேண்டும். அதன் பிறகுதான் பட்டியலின் சிறப்புப் பகுதி வருகிறது. பித்தளைக் கோட்டுத் தகட்டில் (Brass Rule) இரு முனைப்புறங்களும் ஒன்று மெல்லிய கோடாகவும், மற்றொன்று தடித்த கோடாகவும் அமைந்திருக்கும். தடித்த கோட்டு முனை மேற்புறமாக இருக்கும்படி 28 எம் அளவில் ஒரு கோடு போடவேண்டும் அதன் கீழே எண், பொருள் வகை, விலை, தொகை என்ற பத்திகள் அமைய வேண்டும். இந்தப் பத்தித் தலைப்புகளை 10 புள்ளி தடித்த எழுத்தில் தனியாகக் கோத்து வைத்துக் கொள்ளவேண்டும். மொத்தம் உள்ள 28எம் அகலத்தில், எண் போட 2எம் அளவும், பொருள் வகை போட 15எம் அளவும் விலை போட 3.எம் அளவும் தொகை போட 6எம் அளவும் எடுத்துக் கொண்டால் 26எம் ஆகிறது 3 குறுக்குக் கோடுகளுக்கும் ஒரு கோட்டுத் தகட்டுக்கு 2 புள்ளி வீதம் 6 புள்ளி ஆகிறது. 6 புள்ளிஎன்பது இஎம். மீதியுள்ள 1: எம் இடத்தையும் பொருள் வகைபோடும் இடத்தில் கூட்டிக் கொள்ளலாம். எனவே பொருள் வகையின் அகலம் 15எம்முக்குப்பதில் 16:எம்.ஆக்கிக் கொள்ளவேண்டும். எண்-பொருள்வகை-விலை தொகை