பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64


நீண்டுள்ள தாள் முனைகளை, படுக்கையில் அமைந்துள்ள பகரச் சட்டங்களை அழுத்தி, சுருக்கமின்றிப் படியச் செய்ய வேண்டும். தாள் படுக்கையின் மீது, மேல் அச்சுப்பகுதி வந்து பொருந்தும்போது அச்சாகி விடும். படுக்கை சரி செய்தபின், மேலேயுள்ள மைத்தட்டில் சிறிது மை விட்டு, அச்சுப் பொறியை இயக்கி மையை இழைத்துக் கொள்ள வேண்டும். அச்சுப் பொறி இயங்கும் போது மை உருளைகள் மேலும் கீழும் போய்ப் போய் வரும். அதே நேரத்தில் மைத்தட்டுச் சிறிது சிறிதாகச் சுற்றும். சுற்றும். மைத்தட்டின் மீது உருளைகள் ஏறி இறங்கும்போது ஒர் ஒரத்தில் சிறிது தடவிய மை இழைந்து மைத்தட்டின் மற்றப் பகுதிகளுக்குப் பரவும். இப்படிப் பரவிப் பரவி வட்டமாயுள்ள மைத்தட்டு முழுவதும் அழகாக மை பரவிப் படர்ந்து விடும். இந்த மைத்தட்டில் உள்ள மையை, மையுருளைகள் கோப்புப் பொருளுக்குக் கொண்டுவந்து அச்செழுத்துக்களின் மேல் தடவி விடும். கோப்புப்பொருள், படுக்கையில் உள்ள தாளில் படியும்போது அச்சாகிவிடும். சில தாள்கள் அச்சான பின் மீண்டும் சிறிது மை எடுத்துத் தட்டில் தடவ வேண்டும். இவ்வாறு மை குறையக் குறையப் புதிது புதிதாக மை தட விக் கொண்டே வரவேண்டும். ஆயிரம் இரண்டாயிரம் படிகள் வரை அச்சிட இவ்வாறு மை தடவித் தடவி இழைத்து அச்சிடலாம். படிகள் எண்ணிக்கை கூடும் போது மை தடவுவதற்கான நேரத்தை மிச்சப்படுத்தவேண்டும். அதற்காக, மைத்தட்டுக்கு மேலே உள்ள மைத் தொட்டியில் நிறைய மை போட்டுக் கொள்ளவேண்டும். மைத் தொட்டியின் பின்புறம் உள்ள சாவிகளைக் கொண்டு கூட்டியோ குறைத்தோ தேவையான மையை விட்டுக் கொள்ளலாம். இந்த மைத் தொட்டியின் அடிப்புறத்தை, மையுருளை தொடும்போது அதற்கு மை வரும். அந்த மையை மைத்தட்டின் மீது அந்த உருளை