பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66


அச்சிட்ட தாளில் அச்சுப் படிவு தேவையான அளவு உள்ளதா என்று பார்க்க வேண்டும். தாளில் படிவின் அழுத்தம் மிகுதியாக இருக்குமாயின், அடி அட்டைகளில் ஒன்றிரண்டைக் குறைத்து மறுபடியும் அச்சிட்டுச் சரி பார்க்க வேண்டும். அழுத்தம் போதாது என்று கருதினால், அடியில் அட்டையோ, தாளோ புதிதாகக் கூட்டிக் கொள்ள வேண்டும். எழுத்துக்களின் ஊடே, மை அடைந்து எழுத்து கரிக் கரியாய் இருந்தால், எண்ணெயிட்டும், பருத்திக் கழிவினால் (cotton waste) துடைத்தும் எழுத்துக்களின் ஊடே அடைந் துள்ள மையை அகற்ற வேண்டும். மையம் சரியாகவும், அழுத்தம் சரியாகவும், எழுத்துத் தெளிவாகவும், பிழையில்லாமலும் இருக்கிறது என்ற நிலையில் அச்சடிக்கத் தொடங்கலாம். கோப்புப் பொருள் எப்பொழுதும் படிவச் சட்டத்தில் மேல் நடுப்பகுதியில் இருத்தல் வேண்டும். அப்போதுதான் அது பதியும் இடம் நம் அருகில் இருக்கும். அவ்வாறு இருந் தால்தான் அந்த இடத்தில் தாள் வைத்து எடுப்பது எளி தாகும். அடிப்பகுதியில் இருக்கும்படி வைத்தால், தாள் வைப்பதற்காக நாம் கையை மிக உள்ளே கொண்டு போகும் படி நேரிடும். அது ஆபத்தானது. அச்சுப்பொறி இயக்குபவர் நாள்தோறும் காலையில் வேலை தொடங்கு முன், பொறியுறுப்புகள் அனைத்தையும் பருத்திக் கழிவினால் துடைத்தல் வேண்டும். பொறி மூட்டு களிலும் இயங்கு நிலைகளிலும் எண்ணெய் இடவேண்டும் (Mobil oil). அதன் பிறகு தான் படிவம் முடுக்கி, மையிட்டு, படுக்கை சரிசெய்து, படிவு சரி பார்த்து அச்சிடுதல் வேண்டும். ஆயிரம் படிகள் வரை, அச்சிடும் தாளைத் தாங்கி நிறுத்தக் குண்டூசிகளைக் குத்திக் கொண்டால் போதும்.