பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

பிழை திருத்தும் முறைகள் சிலவற்றைக் கீழே காண்போம்.

அச்சுக்கோத்த வரிகளில், நம் பார்வை பதியும் போது ஒவ்வொரு சொல்லாகப் படித்து வரும்போது எந்த எழுத்துத் தவறுதலாக இருக்கிறதோ, அந்த எழுத்தை மேலிருந்து கீழாகக் குறுக்குவாட்டில் ஒரு கோடு | போட்டு அடிக்க வேண்டும். அந்த வரிக்கு நேராக வெளி ஓரத்தில் ஒரு குறுக்குக் கோட்டைச் சாய்வாகப் போட்டு அதன் பக்கத்தில் சரியான எழுத்தை எழுதவேண்டும். பக்கம் என்ற சொல் பக்கம் என்று இருந்தால், ப வுக்கு அருகில் உள்ள க வின் மீது குறுக்காகச் சாய்வு கோடு போட வேண்டும். அந்த வரியின் எதிரில் வெளி ஓரத்தில் மற்றொரு சாய்வு கோடு போட்டு அதன் பக்கத்தில் | க் என்ற எழுத்தை எழுத வேண்டும்.

க தவறு என்பதற்கு அடையாளமாக அதை அடித்தோம். அடித்த எழுத்திற்குப் பதில் க் போடவேண்டும். என்பதற்கு அடையாளமாக|க் என்று வரிக்கு நேராக வெளி ஓரத்தில் எழுதி விட்டோம். தவறான எழுத்துக்குப் பதில் சரியான எழுத்தைப் போட இவ்வாறு திருத்தவேண்டும்.

ஒரு சொல்லில் ஒர் எழுத்து விட்டுப் போயிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

கடவுள் என்ற சொல், கவுள் என்று இருந்தால், அதில் நடுவில் ட வைச் சேர்க்க வேண்டும். இதற்கு கவுள் என்பதற்கு நடுவே, அதாவது க வுக்கும் வுவுக்கும் ஊடே இப்படி ʎ ஒரு குறியைப் போட வேண்டும்.

கʎவுள் என்று குறியிட்டு அதே வரியின் வெளி ஓரத்தில் ʎ என்ற குறியை மறுபடி போட்டு அதன் அருகே ட என்ற எழுத்தை எழுத வேண்டும். வரியின் எதிரில் வெளி ஓரத்தில் ʎ ட என்று எழுதினால், விட்டுப் போய் உள்ள ட வைப்போட வேண்டும் என்று பொருள்.