பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று திங்களில் அச்சுத் தொழில் முதல் திங்கள் : அச்சுக் கோப்பு வேலை பயிலத் தொடங்குவோர் அச்சுப் பெட்டியின் முன் நின்று, ஒவ்வொரு குழியிலும் உள்ள எழுத்துக்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து திரும்பவும் எடுத்த குழி யிலேயே போடுதல் வேண்டும். ஒவ்வொரு வரிசையாக மீண்டும் மீண்டும் எடுத்துப் பார்ப்பதன் மூலம் எந்தெந்தக் குழியில் எந்த எந்த எழுத்து இருக்கிறது என்பது மனப்பாடம் ஆகிவிடும். எழுத்துக்கள் மனப்பாடமானபின் அச்சகத்தில் பிரிக்க வேண்டிய கோப்புப் பொருள்களைப் பிரித்துப் போட வேண்டும். ஆறு நாட்கள் தொடர்ந்து பிரித்துப் போட்டுப் பழகுதல் வேண்டும். இவ்வாறு தொடர்ந்து பிரித்துப் போடுவதால் எழுத்துக் கள் உள்ள இடங்கள் மேலும் நன்றாக மனத்தில் பதிவதுடன் கைவேகமும் கூடிவரும். மூன்றாவது நிலையாக அச்சுக் கோக்கத் தொடங்குதல் வேண்டும். வரிகளை எவ்வாறு அமைத்தல் வேண்டும் என்ற விதிமுறைகளை நன்கு தெரிந்து கொண்டு அடுக்குதல் வேண்டும். தொடக்கத்தில் பிழை ஏற்படாமல் அடுக்கிப் பழகினால் பிறகு விரைவாகச் செய்யும் போதும் பிழை வராது.