பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ify, ist, பி, மாண்டவர் மீண்டது |அங்கம் ! இறந்து போய் விட்டார்களா என்ன ! அது எப்படி நேர்ந்திருக்கக் கூடும்?-தன் தம்பி இறந்து விட்டதாக என்னிடம் வந்து சொன்னனே, ஆனந்தன்! தன் அண்ணன் காலமாய் விட்டதாக, பிரம்மானங் தன் சற்று முன்பாகக் கூறினனே என்னிடம்! இரண்டுபேரும்-ஒரே சமயத்துலே செத்துப்போ யிருந்தா நீ ரொம்ப புத்திசாலி! எவ்வைது ஒருவன் தானே முத லில் இறந்து போயிருக்கக் கூடும்? ஒரு வேளே முன்பு தம்பி செத்துப் போயிருப்பான், பிறகு அண்ணன் அந்த வருத்தம் தாளமுடியாது இறந்து போனனே என்னமோ ? - நாதா, அப்படி யிராது, அண்ணன்தான் முதலில் இறந்துபோயிருக்கவேண்டும், தம்பி என்னிடம் கூறின படி; அப்புறம் அண்ணன் போய் விட்டானே என்று துக்கத்தால் மாண்டுபோனனே என்னமோ ? இந்த சந்தேகத்தை யார் நிவர்த்தி செய்வது? எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது-அடெ வீரபத்திரா! நம்முடைய அரண்மனே வெட்டியானிடம் கடந்ததை சொல்லி, பட்டணமெல்லாம் பறையறையச் சொல்இவர்களிருவர்களில் யார் முதலில் காலமாய் விட்டது என்பதைக் கண்டு பிடித்துச் சொல்பவர்களுக்கு நான் நூறு பொன் கோடுப்பதாக ! (ஒரே தடவையில் இருவரும் எழுந்திருக்கிருர்கள். ஆ ஆ! நான் சொல்ரேன்-என் தம்பிதான் மொதல்லே செத்து பூட்டான் மஹாராஜா நான் சொல்ரேன்! என் அண்ணன்தான் மொதல்லே செத்துபூட்டார் மஹாராஜா! (எல்லோரும் நகைக்கிறர்கள்) நூறுபொன் எனக்குதான் கொடுக்கவேண்டும் மஹா ராஜா! நாறுபொன் எனக்குதான் கொடுக்கணும் மஹாராஜா