பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 02 - - நா. பார்த்தசாரதி:

ஒவ்வோர் அழகிய பெண்ணும் பத்தினியாயிருக்கவேண் டும் என்று எண்ணும் சுயநலமான சிந்தனை அவனிடம் என்றுமே இருந்தது. தனக்கு அடிமை போலிருந்த் சண்பகத்தை அவன் பெரிதாக ஒன்றும் வாழ வைத்துவிட வில்லை. தன்னிடம் அழகிய உடலை ஒப்படைத்து. இணைந்திருந்த மற்றொரு பெண்ணிடமும் அவன் துரோகியாகவே நடந்து கொண்டான். தான் யாருக்கும் துரோகம் செய்யலாம், தனக்கு யாரும் துரோகம் செய்ய நினைக்கவும் கூடாது என்கிற இந்த நிலப்பிரபுத்துவ மனப்பான்மையின் வேர் அவனுள் ஆழ இறங்கியிருந்தது. திரு அங்கே தோட்டத்தில் துணிகள் காயப் போட்டி ருந்த ஒரு புத்தம் புது நைலான் கயிற்றை இழுத்துத் தயா ராக வளையம் போட்டு வைத்துக் கொண்டு அவர்கள் இருந்த ஏ. சி. அறையின் வாயிலில் காத்திருந்தான். பஞ்சமா பாதகங்களில் அவன் முழுத் தகுதியடையக் கொலை ஒன்று தான் இதுவரை மீதமிருந்தது, இன்று அதையும் செய்யக் கூடிய வெறி அவனுக்குள் வந்திருந் தது. படங்களிலும், நாடகங்களிலும், கதைகளிலும் பார்த்துக் கொலை என்பது சுலபமானது, செய்ய முடித் தது, செய்யக் கூடியது என்றெல்லாம் தோன்றினாலும், கைகளும், மனமும் நடுங்கின. .டம்பில் வேர்த்துக் கெர்ட்டியது. கொஞ்ச நேரம்தான் அப்படி. பின்பு அவனுக்குத் துணிவு வந்துவிட்டது.

அவளும் அவனும் சிரித்தபடியே ஏ. சி. அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த போது மறைந் திருந்த அவன் தயாராக நைலான் கயிற்றில் செய்து வைத்திருந்த வளையத்தை அந்த ஆளின் கழுத்தில் கச்சித மாக விழுகிறபடி வீசிக் கயிற்றின் இரண்டு நுனிகளையும் விரைந்து சுண்டி இழுத்து இறுக்கியபோது ஒரே சமயத்தில் இரண்டு அலறல்கள் எழுந்தன. ஒன்று மாட்டிக் கொண்ட வனுடையது. மற்றொன்று அவளுடையது. கயிற்றை அவன் கைகள் இழுத்து இறுக்கிய வேகத்தில் குரல்வளை