பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 நா. பார்த்தசாரதி

மலையைச் சேர்ந்தவர்களே அதை வியந்தரர்கள். திரு மலைக்கே இதில் வழக்கம் போல் தன் எதிரியைப் பழி' வாங்கி முடித்து விட்டாற் போன்ற திருப்திதான் நில வியது. எங்கோ உச்சாணிக் கொம்பில் இருப்பதாகப் பாவித்துக் கொண்டிருந்த கிருஷ்ணராஜ உடையார் தன்னைத் தேடி வந்தது தன் இயக்கத்து ஆட்களிடம் தன் மரி:ாதையை உயர்த்தியிருப்பதாக உணர்ந்தான் அவன். தன்னைப்பற்றி அவனுக்குள்ளே நிரம்பியிருக்கும் குரோ தத்தையும், துவேஷத்தையும் அகற்றி விட வேண்டுமென்று முயன்றால் உடையார். அவனோ அவர் தன்னிடம் பெருந்: தன்மையாக நடந்து கொள்வது, தன்னைத் தேடி வருவது: இவற்றாலெல்லாம் தனக்கு மற்றவர்களிடம் அந்தஸ்து உயருவதை அங்கீகரித்துக் கொண்டு அம்ை மேல் தழும் பேறியிருந்த குரோதத்தை ஆப்படியே வைத்துக் கொண்

டிருந்தான். ஆஸ்பத்திரியில் வெட்டுக் காயத்துடன் படுத்

திருந்ததையும், புது மனைவியான அந்த இளம் நடிகை

அருகே அமர்ந்து கண்ணிர் உகுப்பதையும் கச்சிதமாகப் பல கோணங்களில் தேர்ந்த சினிமாக் கேமரா நிபுணர் களை வைத்துப் புகைப்படமாக எடுத்து வைத்துக் கொண் டான். எலலோரும் இதைப் போய்ப் புகைப்படம் எடுப் ப:னேன் என்று யோசித்தார்கள். அவனோ எதைச் செய் தாலும் ஒரு திட்டமிட்ட மனத்தோடு தீர்மானமாகச் செய் தான். இந்தி எதிர்ப்புப் போர் என்கிற பிரளயம் நடந்து முடிந்தபின் அடுத்த பொதுத் தேர்தலை எதிர்நோக்கி யிருந்த மாதங்களில் திருமலைக்குத் தீவிரமான அரசியல் பணிகள் இருந்தன. அவன் நிறைய சுற்றுப்பயணங்கள் செய்யவேண்டிருந்தது.

அப்படித் திருமலை சுற்றுப்பயணத்தில் இருந்த போது ஒரு சினிமா மஞ்சள் பத்திரிகையில் படித்த கிசுகிசு ஒன்று அவனை நிம்மதியிழக்கச் செய்தது. அவன் மனைவி யும் பிரபல நடிகையுமான அந்த இளம் வயது அழகி வேறு: ஒரு நடிகனுடன் நெருக்கமாகிக் கொண்டிருப்பதாக