பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கணல் - 125 19

பதவியிலிருக்கும்போது செய்யும் தவறு என்பது மலைமேல் நெருப்புப் பற்றுவதுபோல எல்லார்கண்ணிலும் பளிரென்று தவறாமல் தெரியக் கூடியது. அதைத் தவிர்க்க வேண்டும்”-என்றார் அன்பு அண்ணன். அதற்கு மேல் திருவை அதிகம் வற்புறுத்திக் கண்டிக்கவில்லை அவர் பிறரை முகம் சுளிக்கும்படி கடுமையான சொற் களால் கண்டிக்க அண்ணனால் முடியாது, தாட்சண்யங் களை அவரால் தவிர்க்கவே இயலாது :ன் அது திருவுக்கு நன்றாகத் தெரியும். தன்னுடைய அரசியல் எதிரிகள் கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு-காத் திருக்கிறார்கள் என்று இந்த நிகழ்ச்சியின் மூலம் திருவுக்கு நன்றாகத் தெரிந்தது. தன்னுள்ட ஒவ்வொரு தகவற் றையும் பிறர் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்தது. பேச்சாளனாகவும் தலைவனாகவும், கட்சித் தொண்டனாகாம் மேடை மேல் நின்று பார்த்த அதே மக்கள் கூட்டத்தைக் கோட்டை அலுவலகங்களின் வராந்தாவிலும் வாயிற்படிகளிலும் இன்று மறுபடி பார்த்த போது பயமாயிருந்தது. இத்தனை கூட்டமும் தாங்க்ள் நினைத்த காரியம் நினைத்தபடி நடக்காவிட்டால் எப்படி உடனே எதிரியாக மாறும் என்பதை எண்ணி மிரட்சியாயிருந்தது. ஆட்சிக்கு வருவ தற்கு முன் இருந்த தைரியம் இப்போது பயமாக மாறி யிருந்தது.

திருமலையைத் தொழில் வளர்ச்சி மந்திரி என்று போட்டிருந்தார்கள். அதுவரை அவனுக்குத் தெரிந்திருந்த தொழில்கள் நாடகமும், சினிமாவும்தான். இரண்டையும் தவிர மூன்றாவதாக ஏதாவது ஒரு தொழில் அவனுக்குத் தெரியுமானால் அது வெறும் மேடைப் பேச்சுத்தான்.

"எப்படிச் சமாளிப்பது?’ என்று தனியே அண்ண ணைச் சந்தித்துக் கேட்டான் அவன். அண்ணன் மெல்லச் சிரித்தார். - -