பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

且32, - நா. பார்த்தசாரதி

20

சின்ன உடை யாரையும் ராணியையும் திருசிலகணங் கள் நிறுத்தி வைத்தே பேசியது உடனிருந்த மற்றவர். களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. எத்தனை பெரிய பதவியும், பவிஷடும் வந்தாலும் அவனோடு உடன் பிறந்த குணமாகிய தடித்தனம் இன்னும் அவனோடு சேர்ந்தே இணைந்திருப்பது போலத்தான் தோன்றியது. தேடித்தன் மும் பழிவாங்கும் முனைப்பும் பெருந்தன்மை இன்மையின் அடையாளங்களாகத் தோன்றின தனக்கு உள்பட்டனத். தார் கொடுக்க இருக்கும் வரவேற்பை அரண்மனை வாச லில் மேடை போட்டு அளித்தால்தான் பெருமை என்று திடீர் என வேறொரு விதமாக அடம்பிடிக்க ஆரம்பித்தான் திரு. கொஞ்சம் விட்டுக் கொடுக்க ஆரம்பித்திருக்கும் ஜமீன்தாரை அவன் மேலும் அதிகமாகச் சோதனை செய் வதாக உடனிருந்த எல்லோருக்கும் தோன்றியது. பொறுமை இழந்து சின்ன உடையார் கேசபித்துக் கொண்டு வெளியேறப் போகிறார் என்றே அப்போது எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் உடையார் தங்கக்கம்பியாக இழுத்த இழுப்புக்கு வந்தார் 'அதற். கென்ன? செய்தால் போயிற்று' என்று திரு ன் வேண்டு கோளுக்கு உடன் இசைந்து விட்டார் அவர். தன்னுடைய பரமவைரியும், எதிர்க்கட்சிக்காரரும், தன்னிடம் தேர்தலில் தோற்றவருமாகிய ஜமீன்தாரே தன்னை மதித்துப் பயப்படுகிறார் என்று எழிலிருப்பு ஊர் மக்களிடம் ஒரு பிரமையை உண்டாக்கி விட வேண்டுமென்று திரு நினைத்தான். ஆனால் காலத்துக்கும், சந்தர்ப்பத்திற்கும் ஏற்பத் தங்களை மாற்றிக் கொள்வதில் வசதியுள்ளவர்கள் திருவை விடத் துரிதகதியில் இருப்பதை அந்தக் கணமே நிரூபித்தார் ஜமீன்தார் ஆவர். அளவுக்கதிகமாக விட்டுக் கொடுத்துத் தணிந்து போவது திருவுக்கே ஆச்சரி யத்தை அளித்தது. தான் அதிகப் படிப்பற்றவன். ஒழுக்