பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 137

தன்மை காட்டுவது கூட ஆபத்தானது என்று இன்று அவருக்கு மெல்ல மெல்ல உறைத்தது. பெருந்தன்மை யைப் புரிந்து கொள்ள முடியாத கூட்டத்துக்கு நடுவே பெருந்தன்மையாக இருப்பதே தவறானதோ என்றும் தோன்றியது அவருக்கு. -

திரு பேசத் தொடங்கிய சிறிது நேரத்துக்கெல்லாம் சின்ன உடையாரும், தானியும் கூட்டத்திலிருந்து மெது வாக எழுந்து வெளியேறி அரண்மனைக்குள்ளே டோய் விட்டார்கள். அதை அவர்கள் அப்படிச் செய்திராவிடினும் அது ஒரு வரக் ஆவுட் மாதிரிதான் இருந்தது. கின் உடையார் வெளியேறியதும் அவர் கட்சிக்காரர்களும் வேறு பலரும் கூட வெளியேறி விட்டார்கள். கடைசியில் 'த்தில் மீதமிருந்தது திருவும் அவன் ஆதரவாளர் களும்தான். தன்னைப்பாராட்டியோ புகழ்ந்தோகூட அவன் பேச வேண்டுமென்று சின்ன உடையார் எதிர்பார்க்க வில்லை. உபசார விார்த்தைகளைக் கூட அவர் விரும்பி யிருக்கவில்லை. ஆனால் தன்னையும் தன்ன்னச் சேர்ந்த வர்களையும் ஏதோ காரியமாக வேண்டும் என்றால் கழுதையின் கால்களைக்கூடப் பிடிப்பார்கள்- என்பது போன்றதொரு தொனியில் அவன் சித்தரிக்க முயன்றது அவருக்கு உள்ளுறத் தைத்து வேதனை உண்டாக்கி விட்டது. அதன்பின் அந்தக்கூட்டம் முடிகிறவரை அவர் அரண்மனையிலிருந்து வெளியே வரவேயில்லை. திருவும் கூட்டம் முடிந்தவுடன் அவரிடம் போய்ச் சொல்லி விடை பெற்றுப்போகவில்லை. சின்ன உடையாரைத் தந்திர மாகக் கூட்டத்திற்கு வரவழைத்து அடிமைப்படுத்தி விட் டோமென்று ஆணவமானதொகு திருப்தியே அவனுள் நிரம்பியிருந்தது. உள்பட்டணத்துப் பெரிய மனிதர்கள் பலர் மறுநாள் காலையில் முதல்வேலையாக ஜமீன் தாரைப் பார்த்து, நீங்கதான் பெரிய மனசு பண்ணி மன்னிக்கணும் அவருக்குப் பேசத்தெரிஞ்ச லட்சணம் அவ்வளவுதாங்க.."என்று வருத்தப்பட்டார்கள். சின்ன