பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கணல் - - 155

தலையங்கங்கள் கூட வெளிவந்துவிட்டன.தான் அனுப்பிய ஆட்கள் தன் மகனைத் துடிக்கத் துடிக்கக் கொன்று தீர்த்து விட்டார்கள் என்று இந்தச் செய்தியைப் பார்த்த பின் திரு நிச்சயம் செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று அவன் உடல் நிலை மேலும் மோசமடைந்தது, அடிக்கடி நினைவு தவறியது கிழிந்த நாராகப் படுக்கை வில் கிடந்தான் அவன் ஏதோ வேலையாக எழிலிருப்புக் குப் போயிருந்த வேணுகோபல சர்மா சென்னை திரும்பி யதும் திருவைச் சந்திக்க அவன் தங்கியிருந்த மருந்துவ மனைக்குத் தேடி வந்தார். அவர் வந்த சமயம் திரு தன் நினைவற்றுக் கிடந்ததால் டாக்டர்கள் அவரைச் சந்திக்க அனுமதிககவில்லை. தற்செயலாகப் பேசிக் கொண்டிருந்த சர்மா டாக்டரிடம் அந்த கிஷயத்தைச் சொல்ல நேர்ந்தது. 'கடத்திக் கொண்டு போய்க் கொல்லப்பட்டதாகக் கருதப் படும் எழில்ராஜா என்ற இளம் பத்திரிகையாளன் அமைச்சர் திருவின் சொந்த மதன்தான்! ஒருவேளை அந்தச் செய்தி அவரைப் பாதித்திருக்கலாம்” என்று சர்மா கூறியதை டாக்டர் அலட்சியப்படுத்தவில்லை.

அன்று மாலையே டாக்டர் தனியே திருவின் அறைக்குச் சென்று அவனுக்குச் சுய நினைவு இருந்த சமயமாகப் பார்த்து, 'உங்களுக்குத் தெரியுமோ? அந்த இளம் பத்திரிகையாளன், கொல்லப்படவில்லையாம். சாமர்த்தியமாகத் தன்னைக் கடத்தியவர்களிடம் இருந்து தப்பி விட்டானாம்” என்று ஆரம்பித்ததுமே திருவின் முகத்தில் ஆவல், மலர்ச்சி எல்லாம் பளிச்சிட்டன.

- அப்படியா? அவனை நான் உடனே பார்க்கணும் டாக்டர்-என்று திரு படுக்கையில் எழுந்து உட்காரக் கூட முயன்றான். சர்மா கூறியது சரிதான் என்று டாக்டர் முடிவு செய்து கொள்ள முடிந்தது. மறுபடி சர்மாவை அழைத்து வரச் செய்து மேலும் விவரங்களைச் சேகரித் தார் டாக்டர். இதற்கிடையில் கட்சியில் அவனுக்கும்