பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 157才

மாநிலத் தலைநகருக்கு வந்திருந்த சின்னக் கிருஷ்ணராஜ உடையார் அவனுடைய அரசியல் எதிரி என்று அவனே கருதியும் வித்தியாசம் பாராமல் அவனை மருத்துவ மனைக்கு வந்து பார்த்து ஆறுதலாகச் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போனார். அவருடைய தொடர்ந்த பெருந்தன்மைக் குணம் அவனை வியப்பில் ஆழ்த்தியது. சின்னக் கிருஷ்ணராஜன் பிறந்த அதே ஊரில், அதே ஜமீன் அரண்மனையில் அதே தந்தைக்கு மகனாகப் பிறந்தும் தன்னிடம் ஏன் அந்தப் பெருந்தன்மையும் பண் பாடும் சிறிதும் வளரவில்லை என்றுதான் அவனுக்குப் புரியவில்லை. எவ்வளவோ யோசித்தும் பொருள் விளங்காத புதிராயிருந்தது அது. r

"பத்திரிகையாளன் எழில்ராஜா தன்னைக் கடத்தி யவர்களிடமிருந்து தந்திரமாக உயிர்தப்பி விட்டான்'என்று டாக்டர் சொல்லிய பொய் திருவிடம் பல மாறுதல் களை உண்டாக்கியது. சித்தப் பிரமை நீங்கிச் சற்றே தெளிவும் தென்படத் தொடங்கியது அவனிடம். கட்சி யின் எம். எல். ஏ. க்களிடமும் செயற்குழு உறுப்பினர் களிடமும் அவனுக்கு எதிராகக் கையெழுத்து வேட்டை நடப்பதாகக் கன்னையன் மூலம் தகவல் தெரிந்தது. அவனைக் கீழே தள்ளுவதற்குத் தாண்டவராயனே பணம் செலவழிக்க ஆரம்பித்து விட்டதாகவும் தெரிந்தது. தன்னைச் சுற்றியிருந்த எல்லாரும் எல்லாமும் குமட்டியது. அவனுக்கு. தன்னைக் காண வந்த தாண்டவராயனைத் தான் திட்டியதும் பார்க்க மறுத்ததுமே இன்று அவன் தன்னை எதிர்ப்பதற்கு முக்கியமான காரணமென்று சுலப மாகவே அநுமானிக்க முடிந்தது.

நம்பிக்கையின்மையின் காரணமாக எந்தச் சமயத். திலும் மேற்பகுதியில் ராஜிநாமாவை டைப் செய்து. கொள்ள ஏற்ற வகையில் அவன் உட்பட அனைத்து எம். எல். ஏ.க்களிடமும் இடம் காலி விட்டு வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கி வைத்திருந்தது கட்சி