பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

「豊5性 தா. பார்த்தசாரதி

அவனுக்கே புரியாமல் இருந்தது. தோல்விகளின் போது தளராமல் நிமிர்ந்து நிற்கவும் வெற்றிகளின்போது துள்ளா மல் அடங்கியிருக்கவும் மனப்பக்குவமும் ப யி ற் சி யும் வேண்டும். சின்ன உடையாரிடமிருந்த பக்குவம் தன்னி உம் இல்லாதது திருவுக்கு இப்போது புரிந்தது. சிறுவயதில் தன்னை பாஸ்டர்ட் என்று உணர்ச்சி வசப்பட்டுக் கொச் சையாகத் திட்டுகிற அளவுக்குப் பக்குவமற்றிருந்த அதே சின்ன கிருஷ்ணராஜன் தான் இன்று இப்படிப் பரந்த மனத் தோடு பக்குவமாகப் பண்பட்டிருக்கிறான் என்பதை நம்பக் கூட முடியாமல் இருந்தது. வசதிகள் விசாலமான அளவு தன்மனம் விசாலமடையவில்லை என்பதை அவன் தனக் சூத்தானே உணர்ந்தாக வேண்டிருந்தது. - இந்த எல்லா இழப்புக்களுக்கும் வேதனைகளுக்கும் நடுவே ஒரு மகிழ்ச்சி தன் மகனைப் பற்றியதாக இருந் தது. அவன் உயிர் பிழைத்து விட்டான் என்பது திருவுக் குப் பெரிய ஆறுதலையும் நிம்மதியையும் அளித்திருந்தது. எதற்கும் அஞ்சாத நேர்மை வீரனாகிய தன் மகனின் தி : மையால் பெரிதும் பாதிக்கப்பட்டவனாக இருந்தும் அவன் தன் மகன் என்ற பெருமிதமே இப்போது அதிகமாயிருந் தது. குணத்தில் அவன் தன் மனைவி சண்பகத்தின் சாய லோடு அவளைக் கொண்டு பிறந்திருந்தாலொழிய அவனி டம் இத்தனை நேர்மைப் பிடிவாதம் அமைந்திருக்க வழி யில்லை என்பதையும் திருவின் உள்ளம் ஒப்புக் கொண்டது இப்போது. அவ்வளவு நேர்மைப் பிடிவாதம் உள்ள அவன் சர்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கித் தன்னைப்பார்க்க வருவானா என்பது பற்றி இன்னும் திருவுக்குச் சந்தேக மாகவே இருந்தது. அவன் தன்னை பற்றிப் பத்திரிகை யில் எழுதியிருந்த கட்டுரைகளின் கடுமையான வாசகங் கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன. தன்னுடைய மைத்துனன் மூலம் தான் யார் என்ன உறவுவேண்டும் என் பதை எல்லாம் தெரிந்து கொண்ட பின்பு தான் இதை எல்லாம் அவன் எழுதினானா அல்லது தான் யார் என்று தெரியாமலே எழுதினானா என்று யோசித்தான் திரு.