பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

అఐఉఊrు - 165

சண்பகமும் தன்னுடைய மைத்துனனும் அவனை அத் தனை நேர்மையாளனாக வளர்த்து ஆளாக்கியதற்காக அவர்களை இப்போது உள்ளுரப் பாராட்டினான் அவன். தன் மகன் தன்னிடம் வளர்ந்திருந்தால் கூட இப்படி, வளர்த்திருக்க முடியாது என்பது இப்போது அவனுக்கே புரிந்தது. மகனைப் பற்றிய பற்று பாசம் இவற்றைத்தான் இப்போது அவன் வெளிக் காட்டிக் கொள்ள முடிந்ததே ஒழிய அவனைக் கொல்லுவதற்குத் தானே பணம் கொடுத் துக் கூலிப் பட்டாளத்தை ஏவினோம் என்பதைப் பரம இரகசியமாக மனத்துக்குள்ளேயே புதைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. நல்ல வேளையாக அது திருவுக்கும் இன்னும் ஒரே ஒர் ஆளுக்கும் தான் தெரியும். அந்த ஓர் ஆள்தான் அந்தக் கொலையைச் செய்வதாக ஒப்புக் கொண்டுபோனன்ை. அவன் இந்தத் தொழிலில் நிபுணன் , பிடிபடமாட்டான்! பிடிபட நேர்ந்தால் தலையே போனா லும் உங்கள் பெயர் வெளியே வராது’-என்று திருவுக்கு வாக்க்ளித்திருந்தான். இப்போது டாக்டர், சர்மா எல் லோரும் பத்திரிகையாளன் எழில்ராஜா உயிர் தப்பி விட் டிான் என்று கூறுவதிலிருந்து-அவனைக் கொல்ல முயன் றவர்களைப் பற்றித் தடயம் எதுவும் போலிஸாருக்குக் கிடைக்கவில்லை என்று தெரிந்தது. கிணற்றில் போட்டி கல் மாதிரி அந்த விஷயம் ஆழத்தில் அமுங்கிக் கிடந்தது. பத்திரிகைகளில் அதைப்பற்றிய செய்திகளே எதுவும் இல்லை. - -

இன்று தன்னைப் பற்றிய கேரக்டர் அஸாஸினேஷ னைச் சிறிதும் பொறுத்துக் கொள்ள முடியாமல் அதை எழுத்து மூலம் செய்து கொண்டிருந்தவனையே தீர்த்துக் கட்ட ஏற்பாடு செய்த தானே இளமையில் பேச்சு மூலம் எழுத்து மூலம் எவ்வளவு பெரியவர்களைப் பற்றி எத்தனை முறை எத்தனை எத்தனை விதமாகக் கேரக்டர் அஸாஸி னேஷன் செய்திருக்கிறோம் என்பது திருவுக்கு இப்போது நினைவு வந்தது. தனது கொள்ளுப் பேத்திகளாக வேண்

மு-1 . “. .