பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 167

திருவின் வீட்டில் தாண்டவராயன் தம் கம்பெனி, செலவில் இரண்டு மூன்று அறைகளை ஏர்க் கண்டிஷன் செய்திருந்தார். தொழில் வளர்ச்சி இலாகா திருவிடம் இருந்து எடுக்கப்பட்டுப் புதுமந்திரி பதவி ஏற்று அவன் இலாகா இல்லாத வெறும் மந்திரியான தினத்தன்று மாலையிலேயே தாண்டவராயனின் ஆட்கள் வந்து அந்த ஏர்க்கண்டிஷன் ஏற்பாடுகளை எடுத்துச் சென்று விட்ட தாக உதவியாளன் கன்னையா இப்போது தெரிவித்தான். 'அம்மகுளத்தில் அறுநீர்ப் பறவைகள்-என்ற படுகி., தான் நினைவுக்கு வந்தது. தத்துவப் பார்வை, ஆன்மீகக் கனிவு, எதுவும் இல்லாத காரணத்தால் வாழ்வின் இறங்கு முகமான போக்கை அவனால் ஏற்கவோ, சகித்துக் கொள் ளவோ முடியாமல் இருந்தது. கட்சி மேலிடத்திலோ, மந்திரிகள் மட்டத்திலோ, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்தோ அவனைத் தேடி வந்து சந்திப் பது இப்போது படிப்படியாகக் குறைந்து போய் விட்டது. பழமில்லாத மரத்தைப் பறவைகள் நாடி வருவதில்லை. சர்மாவும். நீண்ட காலமாக உடனிருக்கும் உதவியாளன் கன்னையாவும் மட்டுமே இப்போது அவனுடைய கண் களில் அடிக்கடி தென்பட்டுக் கொண்டிருந்தார்கள். இனி அவனால் யாருக்கும் கெடுதல் செய்ய முடியாது என்று தெரிந்தவுடன் ஆதுவரை அவனுக்குப் பய்ந்து நன்ன், களைச் செய்து கொண்டிருந்த கூட்டம் ஒதுங்கிப் போது விட்டது. வேண்டாதவனுக்குக் கெடுதல்களும், வேண்டிய வனுக்கு நன்மைகளும் செய்ய முடியாதபடி யாராவது பதவியிலிருந்தால் அ ப் படி ப் பதவியில்ருப்பவன் யாருமே பொருட்படுத்துவதில்லை. வேண்டியவர்களும் அலட்சியம் செய்வார்கள். வேண்டாதவர்கள் இலட்சியமே செய்ய மாட்டார்கள். இந்த அளவுக்குப் பதவிகளை நாற்ற மெடுக்கச் செய்தது யார் என்று நினைத்தபோது திருவுக்கு அவமானமாக இருந்தது. தான் கொள்ளையடித்ததைத் தணுக்கு உதவிய_உதவிக் கொண்டிருக்கும் சகதிருடர் களோடு பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று கொள்