பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கணல் 17。

திரு இவற்றை எல்லாம் பின்முகமாகத் திரும்பிப் பார்த்தான். சிந்தித்தான். பிரஷர் அதிகமாகி உடல் நிலை மேலும் கெட்டது. அன்று மாலை உதவியாளன் கன்னையா இரகசியமாக ஒரு பத்திரிகையைத் திருவிடம் கொண்டு வந்து கொடுத்தான். அது திருவின் இயக்கத் தைச் சார்ந்த-ஆனால் சமீப காலத்தில் திருவுக்கு எதிரிக ளாக மாறியிருந்த சிலரால் நடத்தப்படும் பத்திரிகை

ஏராளமான லஞ்ச ஊழல் புகார்களுக்கு ஆளான பின்பும், அதன் காரணமாக இலாகா பறிக்கப் பட்டு இலாகா இல்லாத அநாமதேய மந்திரி ஆனபின்பும் சாகக் கிடக்கிற அளவு உடல்நிலை மோசமான பின்பும்: பதவியைவிட மனமின்றி அவன் ஒட்டிக் கொண்டிருப்பதாக அவனைக் கடுமையாக விமர்சித்திருந்தது . அந்தப் பத்திரிகை தன்னைச் சேர்ந்தவர்களே இப்படித் தனக்கு எதிர்ப்பைக் கிளப்புவது அவனுள் எரிச்சலூட்டியது. ரோஷம் வேறு கிளர்ந்தது. தலைமாட்டில் படுக்கையருகே கிடந்த ஒரு லெட்டர் ஹெட்டை எடுத்து ஆத்திரத்தோடு கட்சி மேலிடத்துக்கும் அண்ணனுக்கும் தனித்தனியே உடன் இரு கடிதங்களை எழுதினான் திரு. -

'ஏற்கெனவே நான் கையெழுத்திட்ட வெள்ளைத் தாள் உங்களிடம் இருக்கிறது என்றாலும் அதிகப்படியான முன் ஜாக்கிரதையோடு இதை நான் எழுதுகிறேன். எனது உடல்நிலை மனநிலை காரணமாகக் கட்சியிலோ அமைச்ச ரவையிலோ எந்தப் பொறுப்பும் நான் வகிக்க இயலாத வனாக இருக்கிறேன். தயவு செய்து என் இராஜிநாமாவை உடன் ஏற்று என்னை விடுவிக்கவும்'-ான்று கடிதங் களை எழுதி உறையிலிட்டு ஒட்டி உடனே கன்னையன் மூலம் உரியவர்களுக்குக் கொடுத்தனுப்பினான் திரு. அவனிடம் ஏற்பட்டிருந்த மெட்டமார்பஸிஸ்'- அதாவது அகப்புறக் கருத்துமாற்றம் அப்போது அவனை வேறு வித மாகச் செயல்படவிடவில்லை. கடிதங்கள் கிடைத்ததும்