பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் - 19篮、

கொள்கைகளும் இல்லாமல் பெரிய உயரங்களில் தடலடி யாக ஏறி அந்த உயரங்களைத் தாங்கள் அசிங்கப்படுத்தித். தாழச்செய்திருக்கிறோம் என்று மனம் கூசியது. எதை எதை எல்லாமோ சீர்த்திருத்தப் போவதாகக் கிளம்பின் எல்லாவற்றையும் சீரழித்திருப்பது புரிந்தது. இப்படி நினைத்து நினைவின் சோர்வினாலேயே அயர் ந் து தளாந்து கண்களை மூடினான். -

★ 寅

மறுபடி அவன் கண்விழித்தபோது அறை குளிர்ந்திருந். தது. எல்லா ஜன்னல்களும் மூடப்பட்டு ஏ. சி. ஒடிக் கொண்டிருந்தது. எதிரே சுவர்க்கடிகாரம் மாலை ஆறு. மணியைக் காட்டியது. அறைக்குள் மங்கலான விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. நர்ஸாம் அறையைத் தூசி. துடைத்து சுத்தம் செய்யும் வேலைக்காரியும் தங்களுக்குள் சிரித்துப்பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள். தேர் நிலைக்கு வந்தாச்சா அம்மாளு?” 'வந்தாச்சு சிஸ்டர் வெய்யில் அதிகமா இருந்திச் சுன்னு பகல்லே யாரும் வடம் பிடிக்கலே. வடக்கு மாட வீதி முக்குலே கொண்டாந்து ரெண்டு மணிக்கு அப்படியே விட்டுட்டாங்க...மறுபடி நாலு மணிக்குத்தான் வடம். பிடிச்சாங்க, இப்பத்தான் தேர் நிலைக்கு வந்திச்சி...'

நினைவு மங்கிக் கொண்டிருந்த திருவுக்குள் ஆழத்தில் இருப்பவன் கேட்க முடிந்ததைப் போல் இந்த உரையா டல் மங்கலாகக் காதில் விழுந்தது. -

ஆம்; தேர் நிலைக்கு வந்து விட்டது. மாட வீதியில் காலையில் புறப்பட்ட தேர் மட்டுமில்லை. அவனுடைய மனத்துக்குள்ளிருந்து புறப்பட்ட நினைவுத் தேரும் ஓர். ஒட்டம் ஒடித் தவித்து எங்கெங்கோ சுற்றி அலைந்துவிட்டு அவசர அவமரமாகத் திரும்பி இப்போது நிலைக்கு வந். திருந்தது. அவன் தளர்ந்து போயிருந்தான்.