பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಆಖಹಿಹಣTು 7ί

வரப் போவதை அறிந்த தும் சண்பகம் அவசர அவசரமாக ஆச்சிமூலமே சகோதரனுக்குத் தகவல் அனுப்பினாள். அவனும் உடனே வந்தான், தொடர்ந்த நாக வாழ்க்கையாகப் பட்டியில் அடைப்பட்ட மாடு போல் வாழ்வதைவிட இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று சண்பமுகம் இப்போது துணிந்திருந்தாள்.

'முதல்லியே நீ இங்கே இருக்கவேணாம் ஆச்சி வீட்டிலே இரு. கொஞ்ச நேரம் நான் பேசிச் சமாளிக்கி றேன். அப்புறம் திடீர்ன்னு தற்செயலா வர்ற மாதிரி நீயும் ஆச்சியும் உள்ளே வாங்க’’ என்று சொல்லிச் சகோதரனை ஆச்சி வீட்டில் வந்து மறைந்திருக்கச் செய் தாள் சண்பகம். -

எதிர்பார்த்தபடி திருமலை வந்தான். அவசர அவசர மாக இரண்டு வார்த்தை சொல்லிவிட்டுக் கிளம்பும் வேகத் தில், இந்தா சண்பகம் இப்போ உட்கார நேரமில்லே. எனக்கு அவசரம், மெட்ராஸ் புறப்பட்டுப் போறேன். சினிமர்வுக்கு வசனம் எழுதற சான்ஸ் வந்திருக்கு. மாசா மாசம் பணம் வந்து சேரும், வீட்டையும், பயலையும் கவனிச்சிக்கோ...?’’-என்று ஆரம்பித்தான்.

'நீங்க மட்டும்தான் தனியாப் போறியளா?" "ஆமாம்...அதுக்கென்ன..?' 'பொய் சொல்லாதீங்க...அந்த வடக்குத் தெருக்காரி உங்களோட வர்ரதாக் கேள்விப் பட்டேனே? உள்ளதைச் சொல்லுங்க-’’ o - . -

'அப்படித்தான் வச்சுக்கயேன், அவளை எங்கூட இட்டுக்கிட்டு போறதுக்கு உன் பெர்மிஷன் எனக்கு தேவையில்லை.

"உங்களுக்கு எதுக்குத்தான் என் பர்மிஷ்ன் தேவை? நீங்கதான் எல்லாப் பாவத்துக்கும் துணிஞ்ச மனுஷ் னாச்சே...?' .