பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நா. பார்த்தசாரதி

ஊருக்குப் புறப்படுமுன் கடைசியாக ஒரு நைப்பாசை திருமலையின் மனத்தில் எழுந்தது. சண்பகமோ போய்ச் சேர்ந்து விட்டாள். இனியும் மகனை அவனுடைய மாம னாகிய சண்பகத்தின் தம்பியிடம் வளரவிட வேண்டிய அவசியமென்ன? மகனைச் சென்னைக்கு அழைத்துச் சென்று டான்பாஸ்கோவிலிலோ, வேறு கான்வென்டிலோ சேர்த்துப் படிக்க வைக்கலாமா என்று தோன்றியது. ஒரு நந்தவனத்துப் பண்டாரத்தோடு.தன் மகன் வளர வேண் டாமென்று எண்ணினான் திரு. தானே போய்க் கூப்பிங். டால் நடக்காதென்று தெரிந்தது. சர்மாதான் இதைப் பேசி முடிவு, செய்யச் சரியான ஆள் என்று அவரைக் கூப்பிட்டு எல்லா விவரமும் சொல்லி தத்தவனத்துக்கு அனுப்பினான். சர்ம ச வுக் கு இது சரிவரும் என்று படவில்லை. தயக்கத்தோடுதான் நந்தவனத்துக்குப் புறப் பட்டுப் போனார் அவர். திருமலையின் விருப்பத்தைத், தட்டிச் சொல்ல முடியாமல்தான் அவர் போக வேண்டியி: குந்தது. சண்பகத்தின் தம்பி முகத்திலடித்தாற் போல உடனே மறுத்துச் சொல்லி விட்டான். 'சாமீ! எல்லாம் படிச்சு நாலும் தெரிஞ்ச நீங்க இந்தக் கிராதகனுக்காக, இப்படித் தூது வரலாமா? பையனை இவங்கூட அனுப் பினா அவன் படிச்சு உருப்பட முடியுமா? மூணு நாலு: சம்சாரம்; ஏழெட்டுத் தொடுப்பு. இதோட குடி, சினிமர் சகவாசம் இத்தனையும் இருக்கிற எடத்துலே பையன் ஒழுங்காக எப்படிப் படிச்சு வளர முடியும்? நாலு காசுக்கு ஆசைப்பட்டு உங்களைப் போலப் பெரியவுக இந்த மாதிரி விடலைப் பசங்களோட சுத்தறதே எனக்குப் பிடிக்கலே." "என்னப்பா பண்றது? வயித்துப்பாடுன்னு ஒண்ணு. இருக்கே? காலட்சேபம் எப்படியாவது நடந்தாகணுமே?” என்றார் சர்மா, . - .' -

பிச்சை எடுத்தாவது என் மருமகனை ஒழுக்கமாக வளர்த்துப் படிக்க வைப்பேன்னு சொல்லுங்க-என்று. கறாராகச் சொல்லி விட்டான் சண்பகத்தின் தம்பி. சர்மா