பக்கம்:மூலிகை அகராதி.pdf/4

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பதிப்புரை

ச.மெய்யப்பன், எம்.ஏ.

தமிழ்த்துணைப்பேராசிரியர்,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்


தமிழகத்திற்கென இலக்கிய மரபு, கலை மரபு, இசை மரபு, மருத்துவ மரபு எனத் தனித்தன்மை வாய்ந்த மரபுகள் நீண்ட நெடுங் காலமாக இருந்து வருகின்றன. தொல் பழங்காலத்திலிருந்த மரபுகள் காலப்போக்கில் மறைந்து கொண்டும் வருகின்றன. விடுதலைக்காலத்தில் வீறுபெற்று எழுந்தன; கடந்த நாற்பது ஆண்டுக் காலமாகத் தமிழியக்க முயற்சியினால் தமிழ் இசை, தமிழ் மருத்துவம் புத்துயிர் பெற்றுவருகின்றன. இந்திய மருத்துவத்தில் சித்த மருத்துவம் ஈடு இணையற்றது, தமிழ் மருத்துவம் தனித்தன்மையும் சிறப்பும் மிக்கதென மருத்துவ இயலார் பாராட்டுகின்றனர். சித்த மருத்துவம் சிதைந்தொழியாமல், குடும்பக் கலையாக மறைந்து போகாமலிருக்க, இத்துறை வாழ வளர அனைவரும் பயன்பெற இம் மூலிகை அகராதியை வெளி யிடுகிறோம்.


இந்நூலின் ஆசிரியர் திரு முல்லை முத்தையா அவர்கள் மூத்த பதிப்பாளர்; முதன்மையான வெளியீட்டாளர். எந்த விஷயத்தையும் மக்களுக்கு எளிதாக விளக்குவதே அவரது பதிப்புக்கொள்கையின் நோக்கமாகும். தமிழ் நூல் வெளியீட்டில் பல புதுமைகளையும் புரட்சிகளையும் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூலிகை_அகராதி.pdf/4&oldid=1524760" இலிருந்து மீள்விக்கப்பட்டது