பக்கம்:மூலிகை அகராதி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

என் போன்றோர்க்கு வழிகாட்டியாக விளங்குபவர். சிதறிக் கிடந்த பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களை முதன்முதலில் தொகுத்து வெளியிட்ட பெருமை இவரையே சாரும். இதுவரை இவரது ஏழு நூல்களை நாங்கள் வெளியிட்டுள்ளோம். ஏழு நூற்களையும் வாங்கி வரவேற்பு அளித்ததுபோன்று, தமிழகம் இந்நூலையும் விரும்பி வரவேற்கும் என நம்புகிறோம்.

தமிழ் ஆய்வுக்கு அடிப்படை நூற்களை வெளியிடுவதும் அகராதிகளை வெளியிடுவதும் எமது மணிவாசகர் நூலகத்தின் குறிக்கோள்களில் ஒன்றாகும். இதுவரை நாங்கள் எதிர்ப்பத அகராதி, ஐம்பொறி அகராதி, அடுக்குமொழி அகராதி, மொழியியல் கலைச்சொல்லகராதி, மானிடவியல் கலைச் சொல்லகராதி போன்ற ஐந்து சிறப்புமிக்க அகராதிகளை வெளியிட்டுள்ளோம். இவை மறுபதிப்புப் பெற்றுள்ளன. இன்னும் சில அகராதிகள் உருவாகிக் கொண்டுள்ளன.

மணிவாசகர் நூலகம் வெளியிட்ட நூற்களில் பல பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாட நூற்களாக வைக்கப்பட்டிருக்கும் பெருமை பெற்றுள்ளது. எங்கள் நூல்கள் ஆராய்ச்சியாளர்களால் எடுத்தாளப்பெறுகின்ற சிறப்பு உடையவை. தரமான நூல்களைச் சிறப்பாக வெளியிடுவது மணிவாசகர் நூலகம் எனத் தமிழ்கூறும் நல்லுலகம் நம்புகிறது.


ச. மெய்யப்பன்

 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூலிகை_அகராதி.pdf/5&oldid=1526984" இலிருந்து மீள்விக்கப்பட்டது