பக்கம்:மூவரை வென்றான்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

மூவரை வென்றான் தலைவெட்டிக்...

கடுக்கனைக் கொள்ளையடித்தால், ஐயன் பெருமை பாதிபோன மாதிரி"—

அல்பலக்காரர்கள் ஒன்றுகூடித் தீர்மானம் செய்து கொண்டனர். நேருக்கு நேர் நின்று முத்துசாமி ஐயரை மறிக்க முடியாவிட்டாலும் இருட்டில் பள்ளத்தில் மறைந்திருந்து ஆளை அமுக்கிவிடலாம் என்பது அவர்கள் திட்டம். 'போயும் போயும் ஒரு சிலம்பக் கழியைத் தவிர ஐயரிடம் வேறு ஆயுதம் இருக்காது'–என்பதால், அம்பலகாரர்களுக்கு அன்று தெம்பு பிறந்துவிட்டது. அவர் சிவகாசிக்குப் போவதைக் கண்டதிலிருந்தே இரவு அவரை மடக்குவதற்கான ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இரண்டு ஊர் அம்பலகாரர்களும் அந்த ஒரு மனிதரை மடக்குவதற்காக அதற்குமுன் என்றுமே ஒத்துழைத்திராத வகையில் ஒத்துழைத்தார்கள்.

தலையில் பருத்தி விதை மூட்டை, வலது கையில் சிலம்பக் கழி. 'டக் டக்'—கழியை ஊன்றும் ஒசை. விருட் விருட்டென்று பாய்ந்து வந்துகொண்டிருந்தார் ஐயர். பாதை அவருக்கு மனப்பாடம். இருட்டால் பாதை தவறவோ, மயங்கவோ அவசியமில்லை. கண்ணைக் கட்டி அனுப்பினாலும் ஊர் போய்ச் சேர்ந்துவிடுவார். அத்தனை தடவை அந்த வழியில் நடந்து பழக்கம் அவருக்கு.

அவர் மாறனேரி ஊரைக் கடக்கும்போது இருட்டி இரண்டு நாழிகைக்கு மேலாகியிருந்தது. போகும் போது ஊர்ச் சாவடியில் நிறைய ஆண்பிள்ளைகளைக் கண்டிருந்த் அவர், திரும்பும்போது சாவடி சூனியமாக இருப்பதைக் கண்டார். அவர் முட்டையோடு ஊருக்குள் நுழைந்த போது, இருட்டில் வீட்டு வாசல்களில் கூடியிருந்த பெண்கள். தங்களுக்குள் ஏதோ கசமுச்வென்று பேசிக் கொள்வதையும் கவனித்தார்.

'பாவம்...இந்த ஐயருக்கு அடுத்த தடவை இந்தப் பாதையிலே வரதுக்கு பாக்கியம்...'— இப்படி ஏதோ இரண்டொரு சொற்கள் அவர் காதில் விழுந்தன. இருளில் அவர் காது