பக்கம்:மூவரை வென்றான்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

மூவரை வென்றான்/தலைவெட்டிக்...


இப்படித் தீர்மானம் செய்த பின்புதான் அவரைத் தலை: வெட்டிப் பள்ளத்தில் வழி மறித்துக் குஸ்திக்கு அழைத்தார் கள், வம்புச்சண்டைக்குப் போனாலும் வெற்றி பெறுகிறவர் வலுவில் வந்த சண்டையை விட்டுவிடுவாரா என்ன? மல்லுக் கட்டுக் குஸ்திதானேடா? அதுக்கென்னடா? தாராளமாகப் போடுவோம்! எத்தனை பேர்டா எதிர் நிற்கிறீங்க... என்னோடே?”

“நாலு பேர் நிற்கிறோம் ஐயரே!”

“ஏண்டா? நாலு பேர் போதுமா? இங்கே இருக்கிற பத்துப்பேரும் எனக்கெதிராக நின்னாக்கூட எனக்குச் சம்மதந் தாண்டா? நாலு பேர் எனக்கு ஒரு பெரிய சம ஜோடியாடா? இத்தனை பேருமே நின்னு பாருங்களேண்டா!”

“இல்லை ஐயரே! நாலு பேர் போதும்...”

“சரி! வாங்கடா கோதாவுக்குள்ளே ... முதல்லே யார் பிடி’டா?”

“உங்க பிடியாவே இருக்கட்டும்!”

ஐயர் முஷ்டியை மடக்கிக்கொண்டு பாய்ந்தார். இடுப்பில் இந்தக் காலத்தில் போட்டுக்கொள்கிற ‘ஆஃப் டிராயர்’ மாதிரி ஒரு ‘லங்கோடு’ மட்டும் போட்டுக்கொண்டிருந்தார். வேஷ்டியை அவிழ்த்து வைத்துவிட்டார்.

மல்லுக்கட்டுக் குஸ்தி ஒரு நாழிகை நோம் நடந்தது: முடிவில்...? முடிவில் என்ன ஆயிற்று ஐயரை எதிர்த்த நாலு அம்ப்லக்காரர்களில் ஒருவனுக்குக் கணுக்கால் எலும்பு விட்டுப் போய் விழுந்து கிடந்தான். இன்னொருவனுக்கு இடுப்பில் பிடித்துக்கொண்டது! தரையைவிட்டு எழுந்திருக்கவே முடிய வில்லை. மூன்றாமவனுக்கு மர்ம ஸ்தானத்தில் சரியான அடி. அவன் மயங்கி விழுந்து கிடந்தான். நாலாவது பேர்வழி மூக்கிலும் முகத்திலும் குத்து வாங்கி இரத்தம் ஒழுகச் செயலற்று நின்றுகொண்டிருந்தான். ஐயர் வேஷ்டியை உதறிக் கட்டிக்கொண்டு, “வரேண்டா? ஊருக்கு நாழி யாச்சுடா இன்னும் சாப்பிடலே. சிவகாசி போய்த் திரும்ப