பக்கம்:மூவரை வென்றான்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

மூவரை வென்றான்/தலைவெட்டிக்...

மேலிருந்து சந்தனம், புனுகு, அத்தர் வாசனை கமகமத்தது. புடவை கட்டியிருக்கிற விதத்தையும் கூந்தலை முடிந்திருக்கிற பாணியையும் கொண்டுதான் அவளை ஒரு குடியானவப் பெண்ணாக மதிக்க முடிந்ததே ஒழிய, அவள் உடம்பின் பொன்நிறம், அவள் பேசிய குரல், அவள் சிரித்த சிரிப்பு: எல்லாவற்றிற்கும் மேலாக அவளுடைய அந்த மோகனமான விழிகள், யாவும் சேர்ந்து இவள் குடியானவப் பெண் இல்லை, ஏதோ வானத்திலிருந்து வழி தவறி வந்த மோகினி அல்லது அப்ஸரஸ் என்று சத்தியம் செய்து நிரூபிப்பவைபோலத் தோன்றின.

“இந்தாம்மா! கொஞ்சம் ஒதுங்கியே வா...இதென்ன இப்படி இடிச்சுக்கிட்டா, வர்ரது?’ - ஐயர் கொஞ்சம் கறாரான குரலில் அந்தப் பெண்ணைக் கண்டித்தார்.

‘என்னங்க சாமி! நீங்க என்னைப் பெத்த அப்பன் மாதிரி எனக்கு...வி.கல்பமா நினைப்பேனுங்களா?...ஏதோ கொஞ்சம் பயம்.அதான் இப்படி நெருங்கி...நடக்கேன்-அவள் தலையை ஒய்யாரமாகச் சாய்த்து அவரைப் பார்த்து கிளுக் கென்று ஒரு முல்லைச் சிரிப்பைச் சிந்தினாள். அவள் தலையை ஆட்டியபோது, மார்புத் தாவணி தானே விலகியது. பச்சை நிற ரவிக்கைத் துணிமேல் அவ்விடத்து அழகு குத்திட்டுப் பொங்கி நின்றது, பூரித்த பாற் குடமும், பொலிந்த செவ்விள நீரும்போல! ஐயர் வேண்டுமென்றே கண்களின் போக்கை அடக்கி வேறுபுறம் திரும்பினார். கண் களும் மனமும் கொஞ்சம் அவரை மீறிச் சண்டித்தனம் பண்ணின. அவள் கால்களில் வெள்ளி மெட்டியும் சலங்கை யிட்ட வெள்ளிக் கொலுசுகளும் போட்டுக்கொண்டிருந்தாள். நடக்கும்போது அவரருகில் அவள் ஒவ்வோரடியும் பெயர்த்து. வைப்பது ஏதோ அழகான சதிராட்டம் மாதிரி. இருந்தது. பாதம் பெயர்க்கும்போது உண்டாகிற மெட்டி கொலுசுகளின் ஒசை ஐயருடைய செவியில் ஜலக் ஜலக் என்று வெண்கலக் கிண்ணத்தில் தண்ணீரை ஊற்றித் தட்டியதுபோலக் கேட்டது. அவருக்கு ‘மகளாக’ உறவு படுத்திக்கொண்டு