பக்கம்:மூவரை வென்றான்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

மூவரை வென்றான்/ஊசிக்கொண்டை...


வந்தான். வெகுநாட்களுக்குமுன் அவனுடைய ஒரேசகோதரி அவளுடைய பதினெட்டு வயதில் எங்கோ சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டாளாம். அதிலிருந்து விரக்தி புற்ற மாயாண்டி இப்படிப்பட்ட செயல்களில் இறங்கிவிட் டானாம். இப்படி நம்பவும் நம்பமுடியாமலும் அவனைப் பற்றிச் சிலர் கூறிக்கொள்வார்கள். அவன் பூர்வோத்திரம் எப்படியிருந்தாலென்ன? அந்தச் சுற்றுவட்டத்தில் வாழ்வோ ருடைய அமைதியைப் பொறுத்ததாக இருந்தது அது. அந்த சர்க்கிளுக்குப் போலீஸ் இன்ஸ்பெக்டராக வந்துசேரும் ஒவ்: வொருவரும் இரண்டு, மூன்று மாதங்கட்குமேல் நம்பிக்கை இழந்து வேறு இடங்கட்கு மாற்றிக்கொள்வதும் சகஜமாகி விட்டது. மாயாண்டியைப் பிடித்துவிட்டால் பதவி உயர்வு அடையலாம் என்றெண்ணி வருகின்ற ஒவ்வொரு இன்ஸ் பெக்டரும் ஏமாற்றமும் வேதனையும் கொண்டு தம்மை தொந்தவாறே மூட்டை கட்டிவிட நேரும். அவனைப் பற்றி அந்தப் பகுதிப் போலீஸுக்கு இதுவரை உருப்படியாக அறிய முடிந்த செய்தி ஒன்றுமே இல்லை. ஆனால் அவனுடைய திருவிளையாடல்கள் மட்டும் அடிக்கடி அவர்களைப் பாதிப் பதற்குத் தவறுவதில்லை. அவன் செயல்களின் பயங்கரமும் வியப்பும் அவர்களுடைய நம்பிக்கையைக் கொஞ்ச நஞ்சங் கூட இல்லாமற் செய்து கொண்டிருந்தது.

அதுவும் அந்தச் சப்பை மூக்கு சுதர்சனராவ் காலத்தில் போதும் போதும் என்று செய்துவிட்டான் மாயாண்டி. ஒருநாள் எப்படியோ எக்கச்சக்கமான நிலையில் மாயாண் டியை அவன் பின்புறத் தோற்றம் முழுவதும் தெரியுமாறு ஒரு புகைப்படம் எடுத்துவிட்டார் சுதர்சனராவ். அந்தப் பின்புறத் தோற்றமே கதிகலங்க வைப்பது போலிருந்தது. ஆறடி உயரம், அயனான சரீரம், இரும்பு வார்ப்புப்போல வாளிப்பான கை கால்கள், பரந்த முதுகு, கணத்தில் ஒட்டமெடுத்து மறைவதற்குரியபடி உதவும்-சிறு குதிகால்கள். ஒரு பெரிய யாழ்ப்பாணம் தேங்காய் பருமனுள்ள கொண் டையை முடிச்சிட்டுக் கட்டிக்கொண்டிருந்தான். கன்னங் கரேலென்று சுருண்டு சுருண்டு வளர்ந்திருந்த மயிர்க் கற்றை