பக்கம்:மூவரை வென்றான்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

மூவரை வென்றான்/ஊசிக்கொண்டை...


நல்ல பாம்பு தன் படத்தை உனக்கு விரித்துக் காட்டும்! பயப்படாமற் பார்த்துக்கொள்.’

-மாயாண்டி

என்று கிறுக்கியிருந்தது ஒலை நறுக்கில். சுதர்சன்ராவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. புரியாத புதிரோடு போராடும் வேலை நமக்கு ஏன் என்று அவர் அப்போதே தீர் மானம் செய்துவிட்டார். இரண்டு மாதங்களில் சுதர்சனராவ் வேறு ஊருக்கு மாற்றிக்கொண்டார். ஆனால் மாற்றிக் கொண்டு போவதற்குள் மாயாண்டி அவரைப் படாதபாடு படுத்திவிட்டான். வீட்டில் படுக்கையறையில் காலையில் கண் விழிப்பார் எதிரே குடல் நடுங்கும் காட்சி தென்படும். ஒரு மனித மண்டையோடு கிர்ரெண்று சுற்றிக்கொண்டிருக்கும்! துரங்கிக்கொண்டே இருப்பார், படுக்கை திடீரென்று மேலும் இழுமாகப் போய்வருவதுபோலப் பிரமை ஏற்படும்! விழித்துப் பார்த்தால் தரையில் உருட்டப்பட்டிருப்பார். இன்னும் என்னென்ன்வோ கணக்கற்ற துன்பங்கள். சுதர்சனராவ் ஒரு வழியாகப் போய்ச் சேர்ந்தார்.

***

கடைசியில் ‘மாயாண்டித் தேவன் கைதாகவேண்டும், அல்லது என் உயிர் போகவேண்டும்’ என்ற வைராக்கிய மொழியுடன் வலுக்கட்டாயமாக முல்லையூற்றுக்கு மாற்றிக் கொண்டு வந்து சேர்ந்தார் இன்ஸ்பெக்டர் நல்லமுத்துத் தேவர். தம்முடைய வைராக்கியத்தை மெய்ப்பிப்பது போலவே விருவிருப்பாகச் செயலாற்றவும் தலைப்பட்ட்ார். ஊராருக்கும் நம்பிக்கை தட்டியது. தேவர் இராப்பகலாகப் பொதிகை மலைப் பகுதிகளில் குண்டுகள் நிறைந்த பிஸ்ட்லு’ - டன் சுற்றினார். எத்தனையோ சப்இன்ஸ்பெக்டர்களுடைய அனுபவங்களைச் சொல்லிப் பலர் அவரை எச்சரித்தனர். ஆனால் அந்த உருட்டல் மிரட்டல்களுக்கு அசைந்துகொடுக்க வில்லை நல்லமுத்துத் தேவர். இம்மாதிரி, பேசுபவர்களைக் கண்டே வெறுத்தார். எந்த இடங்கள் அவருக்குச் சந்தேகம்