பக்கம்:மூவரை வென்றான்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

125


எதிரிலிருந்த இன்ஸ்பெக்டர் துள்ளிக்குதித்தார். போலீஸார் வளைத்தனர். பிஸ்டல் தன் குதிகாலுக்கு நேரே குறிபார்த்து நிற்பதை மாயாண்டி கண்டான். எதிரே இன்ஸ்பெக்டர் நல்லமுத்துத்தேவர் பிஸ்டலுடன் நின்று: கொண்டிருந்தார். வெருண்டு ஓடிய கூட்டத்தின் மக்களில் ஒருத்தியாக ஒடிக்கொண்டிருந்த வள்ளியை அவன் கண்கள் துழாவின. நான்கு புறமும் ஆவலோடு பார்க்கும் அவன் நோக்கை, தப்பிக்க எண்ணுவதாகத் தவறாகப் புரிந்து கொண்ட இன்ஸ்பெக்டர் ‘இந்தச் சந்தர்ப்பமும் தவறி விடுமோ?’ என்ற ஆத்திரத்தில் பிஸ்டலின் குதிரையை அழுத்திவிட்டார். மாயாண்டி சுருண்டு கீழே விழுந்தான். ஒரு கையால் முழங்காலைப் பிடித்துக்கொண்டே ‘வள்ளி! வள்ளி! எங்கே போனாய்?’ என்ற வினாவுடன் மீண்டும். அவன் கண்கள் விலகி நின்ற ஜனக்கூட்டத்தை ஊடுருவின. ‘இளமையில் மனமுருக அறிவுரை கூறிய இளந்தங்கையின் கணவன்தான் தன்னால் கையிழந்த தங்கராஜ வள்ளியைத் தான் தங்கை என்ற பாசத்துடன் ஆதரிக்கத் தவறிவிட்டோம். அவள் கணவன் கையை இழக்கவும் நாமல்லவா காரணமாயிருந்தோம்’ என்று அவன் நினைவு பேசியது. பலப்லவென்று. கண்ணிர்த் துளிகள் முழங்காலில் வடிந்துகொண்டிருந்த செந்நீர்க் குருதியில் ஐக்கியமாயின. அழஅழப் பிறரைத் துன்புறுத்திய மாயாண்டித்தேவன் முதன் முறையாகச் சிறு துளி கண்ணிர் சிந்தினான். கொண்டையில் அரிப்பு எடுப்பு துணர்ந்து தலை முண்டாசை அவிழ்த்துவிட்டுக் கையை வைத்த மாயாண்டி ‘ஆ’ என்ற அலறலுடன் கையை எடுத்துக் கொண்டான்! அதற்குள் இரண்டோர் ஊசிகள் கையில் ஏறி விட்டன. ஆனால் விஷ மூலிகைகளால் வயிரம் பாய்ந்த அவன் உடலில் அவைகள் ஒன்றும் செய்துவிட முடியவில்லை.

‘தான் வைத்துக்கொண்ட ஊசி தன்னையே ஏன்? வைத்த தன் கைகளையே குத்திவிட்டது. வள்ளிக்குத் தான் செய்த துரோகமும் அப்படிப்பட்டதுதானே? கூடப்பிறந்த தங்கையின் கணவன் கையிழ்க்கச் சகோதரன் சத்துருவா?