பக்கம்:மூவரை வென்றான்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

33

பிரதானவாயில் வந்ததோ, இல்லையோ, “ஜமீன்தார்வாள்!” நான் நல்லது செய்கின்றவன். இனி இம்மாதிரி அபாயகரமான முறையில் என்னோடு விளையாடினர்களோ, உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமில்லை” - என்று கூறி அவரைத் தன் பிடியிலிருந்து உதறிவிட்டுத் தெருவில் பாய்ந்தார்.

ஜன நடமாட்டமுள்ள வீதியில் இறங்கிய பின் வெளிப்படையாக ஜமீன்தாரால் என்ன செய்ய முடியும்? அவர் மனத்திற்குள், கிழட்டுப் பினமே! இன்றைக்கு எங்களை ஏமாற்றி விட்டுத் தப்பிவிட்டாய்! என்றாவது ஒருநாள் உன்னைத். தீர்த்துக் கட்டாமல் விடப் போவதில்லை என்று கறுவிக் கொண்டார். அதைத் தவிர அவர் அப்போது வேறு என்ன தான் செய்யமுடியும்?

அரண்மனையிலிருந்து தப்பி வந்த தெய்வச் சிலைபார். பல விஷயங்களைச் சிந்தித்து ஒன்றும் தெளிவாகப் புரியாமல் ஒரே குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார்.

தீவட்டிக் கொள்ளைக்காரரைப் பிடிக்கத் தாமே முயற்சி. செய்ய வேண்டிய ஜமீன்தார் வேண்டுமென்றே சும்மா இருக்கிறார். ஜனங்களின் உதவியால் என்னைப் போன்ற ஒருவன் அந்த முயற்சியில் ஈடுபட்டால் இரகசியமாகக் கூப்பிட்டு அது கூடாதென்று மிரட்டுகிறார். இந்த விஷயம் ஒரு புதிராக அல்லவா இருக்கிறது? இந்த முயற்சியில் எனக்கு வெற்றி கிடைத்துவிட்டால், ஜமீன்தாரால் கூட முடியவில்லை. அதைத் தெய்வச்சிலைத் தேவர் செய்துவிட்டார் என்று. ஜனங்கள் பேசுவார்களே என்பதற்காகப் பயப்படுகிறாரோ? அப்படியானால் அவரும் அவருடைய ஆட்களும் என்னோடு உதவியாக இருந்து வெற்றியில் தங்களுக்கும் பங்கு தேடிக் கொள்ளட்டுமே! நான் அதை வேண்டாமென்றா சொல்லி விடப் போகிறேன்? எதற்காக இந்த வஞ்சகம்? இரகசியமாகக் கூப்பிடுவது, கருத்துக்கு இசையாவிட்டால் ஆட்களைவிட்டு அடிக்க முயல்வது! நாணயமான ஜமீன் பரம்பரையில் பிறந்த ஜமீன்தார் செய்யக்கூடிய காரியங்களா இவை? இந்த விஜயாலய மருதப்பனுடைய வாழ்வே ஒரு சூழ்ச்சிப் புதிராகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/35&oldid=507796" இலிருந்து மீள்விக்கப்பட்டது