பக்கம்:மூவரை வென்றான்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

மூவரை வென்றான்/பெரிய...


தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் பத்து கெஜம் முன்னாலும் தேவர் பத்து கெஜம் பின்னாலுமாகச் சென்று கொண்டிருந்தனர். புதர்களிலும், செடி கொடிகளிலும், ஒளிந்து, ஒளிந்து, அவர்கள் திரும்பிப் பார்த்துவிடாமலும், அதி ஜாக்கிரதையாகப் பின் தொடர்ந்தார்.

தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும்போதே திடீரென்று குதிரைகள் கனைக்கும் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவர் அப்படியே திகைத்துப் போய் வழியோரத்துப் புதரில் பம்மிப் பதுங்கிக்கொண்டார். அந்தக் குறுகிய வழியில் வரிசையாகக் குதிரைகள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ஒரே ஒரு குதிரையில் மட்டும் இவர்களை எதிர் பார்த்துக் கொண்டு இவர்கள் மாதிரியே கரும்பூதம் போன்ற உடையணிந்து ஒருவன் காத்திருந்தான். தீவட்டியோடு போனவர்கள் அவனிடம் நடந்து கொண்ட விதத்திலிருந்து அவன்தான் அந்தக் கொள்ளைக்கூட்டத்தின் தலைவனான பெரிய மாயனாக இருக்க வேண்டுமென்று தேவருக்குத் தோன்றியது. எல்லோரும் தீவட்டிகளோடு குதிரைமேல் ஏறிக்கொண்டனர். உற்றுப் பார்த்தபோது எல்லாக்குதிரைகளும் ஜமீன் மாளிகையைச் சேர்ந்தவை போல் தோன்றின.

‘ஜமீனை சேர்ந்த ஆட்கள், ஜமீனைச் சேர்ந்த குதிரைகள், கொள்ளைக்காரர்களை ஜமீன்தார் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது, தம்மை இரகசியமாகக் கூப்பிட்டுக் கொள்ளைக்காரர்களைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபடத் கூடாதென்று தடுத்தது-இதற்கெல்லாம் என்ன தொடர்பு?, என்ன காரணம்? என்ன அர்த்தம்?’ - தேவருக்கு எல்லாம் ஒரே புதிராகத் தோன்றின. ஒன்றுமே தெளிவாக விளங்க. வில்லை.

அவர் இவ்வாறு மனம் குழம்பிக்கொண்டிருந்த போது குதிரைகள் தடதடவென்ற காலடிச் சத்தத்துடன் ஊரை நோக்கிச் சென்றன. ‘இதுவரை தெரிந்த தடையங்கள் போதும்; இனி இவர்களைப் பின்பற்றவும் முடியாது’ பின் பற்றுவதனால் பயனுமில்லை! நடக்க வேண்டியவற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/42&oldid=507806" இலிருந்து மீள்விக்கப்பட்டது