பக்கம்:மூவரை வென்றான்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

41


நாளை இரவில் கவனித்துக் கொள்ளலாம்’ - என்று தமக்குள் தீர்மானித்துக்கொண்டு வந்த வழியே திரும்பி நடந்தார், தெய்வச் சிலைத் தேவர்.

மலையடிவாரத்துக்கு வேவு பார்க்க வந்திருந்த மற்ற ஆட்கள் தேவரை எதிர்பார்த்து ஒரு இடத்தில் காத்துக் கொண்டிருந்தார்கள். தேவர் ஐயனார் கோவில் வழியாக அந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார். தாங்கள் போன இடங்களில் கொள்ளைக்காரர்களைப் பற்றி ஒரு உளவும் கிடைக்கவில்லை என்று அவர்கள் வருத்தத்தோடு கூறினார்கள்.

“பரவாயில்லை! அதனால் கவலைப்படாதீர்கள். கிடைக்க வேண்டிய எல்லா உளவுகளும் அநேகமாக நான் போன இடத்திலேயே கிடைத்துவிட்டன. நாளை இரவு இத்தனை நாழிகைக்கெல்லாம் பெரிய மாயன் கோஷ்டியைக் கூண்டோடு பிடித்து விடலாம்.”

“எப்படி? எப்படி? இவ்வளவு சீக்கிரத்தில் அகப்பட்டு விடுவார்களா?” என்று ஒவ்வொருவரும் தாங்க முடியாத ஆவலுடன் தேவரைக் கேட்டனர். அவ்ர்கள் எல்லோரும் மங்கலக் குறிஞ்சியின் நலனில் உண்மையாகவே அக்கரை உள்ளவர்கள்.

தெய்வச் சிலையார் அவர்கள் யாவரையும் அமைதியாக இருக்குமாறு கூறிவிட்டுத் தம்முடைய திட்டத்தை விவரிக்கலானார்:-

“நாளை நடுப் பகலிலிருந்து நம்முடைய வேலைத் திட்டங்கள் தொடங்குகின்றன. மலையடிவாரத்து ஐயனார் கோவிலில் இரகசியமாக நாளைக்கு உச்சிப்போதில் நாம் சந்திக்கவேண்டும். தீவட்டிக் கொள்ளைக் கூட்டத்தைப் பற்றிய சில மர்மங்கள் இன்னும் பெரிய புதிராகத்தான் இருக்கின்றன. அந்தப் புதிர்கள் வெளியாகும்போது நீங்களும், நானும், இந்த ஜமீனும் மட்டும் அல்லாமல் அக்கம் பக்கத் திலுள்ள சகல ஊர்களும் நாடு நகரங்களும்கூட மூக்கில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/43&oldid=507807" இலிருந்து மீள்விக்கப்பட்டது