பக்கம்:மூவரை வென்றான்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

மூவரை வென்றான்/பெரிய...


மறுநாள் பொழுது விடிந்தது. சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் அதே சமயத்தில் படு இரகசியமாகவும் கேழ்வரகும் ஒலைப்பாயும் தயாராயின. சிலம்பக் கழி வீசுவதில் வல்ல வாலிபர்கள் கூட்டமும் சேர்க்கப்பட்டுவிட்டது.

பகல் உச்சிப் போதுக்குத் தெய்வச் சிலைத் தேவரும் மற்ற முக்சியமான ஆட்களும் ஐயனார் கோவிலில் சந்தித்தார்கள் முதல் வேலையாகக் குதிரையின் உடலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தீவட்டிகள், இலுப்பெண்ணெய்க் குடம், கறுப்பு அங்கிகள் எல்லாவற்றையும் அங்கிருந்து அப்புறப் படுத்தி வேறு இடத்தில் கொண்டுபோய் ஒளித்து வைக்க ஏற்பாடு செய்தார். அப்போது அந்தக் கறுப்பு அங்கிகளில் ஒரே ஒரு அங்கியை மட்டும் அவர் யாருக்குந் தெரியாமல் தம் வசம் மறைத்து வைத்துக்கொண்டார்.

ஐயனார் கோவிலுக்கு மேற்கே தீவட்டிக் கொள்ளைக் காரர்கள் குதிரைமீதேறி ஊருக்குள் பிரவேசிக்கும் குறுகிய கொடி வழியில் முந்நூறு கெஜ தூரத்திற்கு, கெஜம் ஒன்றுக்கு ஒரு பாய் வீதம் எல்லாப் பாய்களையும் நெருக்கமாக விரித்து அவற்றின்மேல் பரவலாகக் கேழ்வரகைச் சிதறிவிடும்படி செய்தார். பின் சிலம்பு வீரர்கள் ஐம்பது பேரோடு சாதாரண ஆட்கள் ஐம்பது பேரையும் சேர்த்து நூறு ஆட்களையும் மூன்று கெஜத்துக்கு ஒரு ஆளாக வழியோரப் புதரில் பதுங்கி ஒளிந்திருக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. கொள்ளைக் காரர்களின் எண்ணிக்கை இருபது இருபத்தைந்திற்குள்தான் என்றாலும் குதிரைமேல் வரும் அந்த முரடர்களை மடக்கி வளைத்துப் பிடிப்பதற்கு அதிகமான ஆட்கள் வேண்டும் என்பதற்காகத் தோதாக நூறு ஆட்கள் மறைத்து வைக்கப் பட்டிருந்தனர். சந்தர்ப்பவசத்தால் கொள்ளைக்காரர்களில் யாரைக் கொல்ல நேர்ந்தாலும் சிவப்புக் குதிரைமேல தீவட்டிக் பிடிக்காமல் வெறுங்கையோடு உட்கார்ந்திருக்கும் ஆளை மட்டும் எப்படியாவது உயிரோடு பிடித்துவிட வேண்டும் என்பது தேவரின் கட்டளை. ஏனென்றால் அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/46&oldid=507810" இலிருந்து மீள்விக்கப்பட்டது