பக்கம்:மூவரை வென்றான்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வெள்ளையத்தேவன் பாறை


மாலை ஆறுமணிக்கு மலையிலிருந்து இறங்கி இருட்டு வதற்குள், ஜீப்பில் ஊர் திரும்பிவிட வேண்டும் என்பது புறப்படும் போது நாங்கள் போட்டிருந்த திட்டம். ஆனால் மனிதயத்தனத்திற்கும் மேற்பட்ட சக்தி ஒன்று “உலகில் நான் இருக்கிறேன். என்னை மறந்துவிடாதீர்கள்” என்று அறிவுறுத்துவதுபோல, நம்முடைய திட்டம் சில சமயங்களில் மாறிவிடு கிறதே! அந்த மாதிரியேதான் அன்றைக்கும் நடந்துவிட்டது ஆம் மாலை ஐந்து மணிக்கே மழை பெரிதிாகப் பிடித்துக் கொண்டது.

“நான், வீராசாமித் தேவர், கோடைக்கானலிலிருந்து வந்திருந்த வேட்டை நிபுணர் ஜான்ஸன் மூவரும் மாலை ஆறரை மணிக்குக் கொங்கு மலையின் அடிவாரத்திலுள்ள கபிலக்குறிச்சி கிராமத்திலிருந்து மலைக்குப் புறப்பட்டிருந்தோம். காட்டிலாகா ரஸ்தா, மலைமேல் குறிப்பிட்ட சில இடங்கள் வரை ஜீப்பிலேயே செல்ல வசதியாக இருக்கு மென்று முன்பே தெரிந்துகொண்டிருந்தோம்.

நானும் வேட்டை நிபுணர் ஜான்ஸனும்தான் அந்த மலைக்குப் புதியவர்கள். வீராசாமித் தேவரோ இருபது வருஷங்களுக்கு மேலாகத் தம் சொந்த ஊராகிய கபிலக் குறிச்சி கிராமத்திலிருந்து, அங்கே வாரந் தவறாமல் வேட்டைக்குப் போய்ப் பழகியவர். ஜான்ஸன் ஆங்கிலோஇந்திய இளைஞர். மதுரை அமெரிக்கன் காலேஜில் படிக்கும் போது தமிழ்ப் பாட சம்பந்தமாக அடிக்கடி என்னிடம் தமிழ்ச் சங்கத்திற்கு வந்து சந்தேகங்களைத் தெளிவு செய்து கொண்டு போவார். இதனால் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. ஆகவேதான் அவர் கோடைக்கானலிலிருந்து கொங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/53&oldid=509511" இலிருந்து மீள்விக்கப்பட்டது