பக்கம்:மூவரை வென்றான்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

55


இதற்குள் ஜான்ஸனும் அங்கே எழுந்து வந்து சிலையை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டே நின்றார். நான் ரொட்டியையும், தேநீரையும் தீர்த்துக் கட்டி விட்டு, வீராசாமித் தேவரின் வாயைக் கிண்டினேன்.

வீராசாமித் தேவர் வெள்ளையத் தேவனின் வாழ்க்கையைப் பற்றிய சம்பவங்களைப் பின்ன பின்னமாகக் கூறினார். நான் மொத்தமாகவே ஒரு கதையாகத் தொகுத்திருக்கிறேன்.

***

கபிலக்குறிச்சி மறவர்களின் இருப்த்தெட்டாவது தலை முறையில் தலைக்கட்டு நாட்டாண்மையாக விளங்கிய வீரபாண்டியத் தேவரின் மூத்த பிள்ளைதான் இந்த வெள்ளையத்தேவன். நாட்டாண்மைத் தேவருக்கு ஒரு பெண்ணும் இருந்தாள். அவள் வெள்ளையனுக்கு இளையவள். மீனாட்சி என்று அவளுக்குப் பெயர். வெள்ளையனுக்கு இருபத்தைந்து வயது ஆனபோது மீனாட்சிக்கு வயது பதினேழு. இருவருக்கும் எட்டு வருஷ வித்தியாசம். இந்த இரு மக்களையும் நாட்டாண்மைத் தேவருக்குக் கால் கட்டாக விட்டுவிட்டு, அவர் மனைவி சில வருஷங்களுக்கு முன் கால மாகிவிட்டாள். உறவு முறைக்குள்ளே பலர் வற்புறுத்தியும் நாட்டாண்மைத் தேவர் அதற்குப்பின் இரண்டாந்தர விருப்பம் எனக்குக் கிஞ்சித்தும் இல்லை, என்று மறுத்து விட்டார்.

இப்படியிருக்கும் நிலையில்தான் பரம சாதுவாயிருந்த வெள்ளையத் தேவன், மனங்கொதித்துத் தன் வாழ்க்கையின் போக்கையே மாற்றிக்கொள்ளத் தக்க அந்தச் சம்பவம் நிகழ்ந்தது! வெள்ளையத் தேவனை மட்டுமில்லை; எங்கள் ஊரையே பாதித்தது அந்தச் சம்பவம்.

இங்கே எங்கள் ஊருக்கு மேற்கே, மேலமலை அடிவாரத்தில் கரிசல் குளம் என்ற ஊர் இன்றும் இருக்கிறது. அங்கும் எங்கள் மறக்குடியைச் சேர்ந்தவர்கள்தாம் அதிகமாக வசிக்கிறார்கள். பெண் கொடுக்கல், வாங்கல், இனம், ஒன்றுக்குள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/57&oldid=509515" இலிருந்து மீள்விக்கப்பட்டது