பக்கம்:மூவரை வென்றான்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

மூவரை வென்றான்/வெள்ளையத்...


“விஷயம் இப்போதுதான் விளங்குகின்றது! உன் தங்கை யிடம் சரியாக விசாரித்துக் கொள்ளாமலேயே நீ புறப்பட்டு விட்டாயே? நான் உள்ளே போய் அவளுக்கு ஆறுதல் கூறி, ஆசுவாசப்படுத்தி விசாரித்ததில் உண்மை வெளிவந்து விட்டது. கரிசல்குளம் பண்ணைத்தேவரை உனக்குத் தெரிந்: திருக்கும். பெரிய செல்வந்தர். அவருக்கு இருக்கும் ஒரே ஒரு பெண்தான் வாரிசு. சொத்தெல்லாம் நாளை அந்தப் பெண்ணுக்குத்தான் சேரவேண்டும். தம் பெண்ணுக்குக் கல்யாண வயது வந்துவிட்டதனால் பண்ணைத்தேவர் எப்படியும் இந்தச் சித்திரைக்குள் கல்யாணத்தை நடத்தி விடவேண்டும் என்றிருக்கிறாராம். ‘மலடி’ என்று சொல்வி ஒதுக்கிவிட்டு, பண்ணை தேவரின் சோத்துக்கு ஆசைப்பட்டு அவர் பெண் னுக்குப் பரிசம் போடப் போகிறானாம் உன் மருமகப்பிள்ளை. இதுதான் விஷயம்!”

“பார்த்துவிடலாமே அவன் பரிசம் போடுவதை! மாமா! இந்த வெள்ளையத்தேவன் உடலில் உயிர் இருக்கிறவரை அதை நடக்கவிடமாட்டேன்’ என்று வெள்ளை குமுறினாள்.

“வெள்ளை! இந்த மாதிரி நாசூக்கான விஷயங்களிளெல் லாம் கத்தியைவிட யுக்திதான் பயன்படும். உன்னிடம் ஆத்திரம்தான் இருக்கிறதே தவிர அனுபவம் இல்லை. முதலில் தலைக்கட்டுக்களை எல்லாம் வீட்டுக்கனுப்பு. மாரியம்மன் திருவிழாவைப்பற்றி இந்த விவகாரம் ஒய்ந்தபின், சாவ தானமாகப் பேசிக்கொள்ளலாம், மீனாட்சி விவகாரத்தில் இப்போதைக்கு இவர்களுடைய ஒத்துழைப்பு தேவையில்லை. விவகாரம் யுக்தியால் தீர்வதற்கு எனது யோசனையை நீ கேள்’ என்று மாமன் கூறினான்.

வெள்ளைத்தேவனும் அப்படியே செய்தான். தலைக் கட்டுக்கள், மாமன் வந்து தங்கள் ஆத்திரத்துக்கு அணை போட்டுவிட்டானே” என்று அவனை நொந்துகொண்டே வீடு திரும்பினர்.

பாலாக்கம்பையும், அரிவாளையும் மூலையில் வீசி எறிந்து விட்டு, அனுபவஸ்தரான மாமனுக்கு முன்பு அமர்ந்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/62&oldid=508092" இலிருந்து மீள்விக்கப்பட்டது